வடகலை vs தென்கலை
*******************************************/
***** வடகலை vs தென்கலை *****
********************************************/
(குறிப்பு: இதை SHARE செய்வதால் உங்கள் பணம் ஒன்றும் கரைந்து விடாது. உங்கள் கிரீடமும் இறங்கிவிடாது)

பாகம்-1. முன்னுரை
அடியேன் வடகலைப் பிரிவினைச் சேர்ந்த ஸ்ரீவைட்ணவ குடும்பத்திலிருந்து வந்தவன். தாய்மொழி தமிழ் இல்லையெனினும் பெற்ற தாயைவிட ஆயின செய்யும் திருமாலின் மீதும் திருமகளின் மீதும் அத்தம்பதியரின் மீதான அன்பில் ஆழ்ந்த ஆழ்வார்கள் மீதும் பேரன்பு பூண்டவன். இந்த உலகிலேயே தமிழ் மொழியை விட மேலான ஒரு மொழி இல்லையென்பதில் அணுவளவும் சந்தேகமற்றவன். இருப்பினும் ஆழ்வார் ஈரச்சொற்களுக்கு வியாக்யானம் மணிப்ரவாளத்தில் இருப்பதனாலும், உடையவர், முதற்கொண்ட பூர்வாசார்யர்கள் அருளிய க்ரந்தங்களை சேவிக்க வேண்டியும் வடமொழியும், அதன் இலக்கணமாகிய லகு சித்தாந்த கௌமுதியும் கற்றேன். தர்க்க பாஷையில்லாமல் வேதாந்தம் பயில முடியாது என்பதனால் தர்க்கசங்க்ரஹமும் கற்றவன் ஆவேன்.

ஸ்ரீவைட்ணவத்தில் வடகலை பிரிவுக்கும், தென்கலைக்கும் வெறும் திருமண்காப்பு இடுவதில் பிரச்னை என்று பல பாமரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கோயில் யானைக்கு என்ன திருமண் இடுவதென்று தகராறு ஆகி, பிராது லண்டன் ப்ரீமியர் கோர்ட் வரை, சென்று ஊர் சிரித்தது தெரிந்ததே.
ஆயினும் இது தத்துவங்களில் ஏற்பட்ட வேறுபாடுகளால் விளைந்தது ஆகும். தத்துவம் என்று சொன்னபொழுதே, அது வடமொழியில் தான் பயிலமுடியும் என்பதனை பாமரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடியனுடைய உறவினர் ஜெர்மனியில் சென்று மருத்துவம் பயில்கின்றார். அது ஜெர்மனி மொழியை பயிற்று மொழியாகக் கொண்ட கல்லூரியாகும். அதற்காக TESTDAF என்னும் ஜெர்மனி மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்னதான் ஜெர்மனி மொழி பயிற்று மொழியாக இருப்பினும், மருத்துவ கலைச் சொற்கள் லத்தீன், கிரேக்க மொழியில் தான் உண்டாகையால் ஆங்கில மொழியும் தெரியவேண்டும். எனவே IELTS என்னும் ஆங்கில மொழி தேர்விலும் தெர்ச்சி பெறுதல் நலமாகும்.
அவ்வாறே சனாதன தர்ம தத்துவக் கருத்துக்கள் தமிழில் கற்றுக் கொள்ள முடியவே முடியாது. அதிலுள்ள கருத்துக்களை சுருக்கமாகத் தமிழாக்கம் செய்தவர்கள் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் தான். பல்வேறு கிளவிகளை (கலைச் சொற்களை) உருவாக்கியவர்கள் இவ்விருவர்தாம். பின்னாளில் வந்த நாயன்மார்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை(ஆதாரமாக உ.வே.சா நல்லுரைக் கோவை கட்டுரை பின்னர் தரப்படும்). “தமிழ் நன்னூல் துறைகள் ஐந்துக்கு இலக்கியம் ஆரணசாரம்= பரகாலன் பனுவல்களே” என்று நடமாடும் பாணினியாம் கூரத்தாழ்வான் வாக்கிலிருந்து இதை அறியலாகும். (அடியேன் ஆசார்யர் ஸ்ரீமத்.உ.வே.வேளுக்குடி ஸ்வாமி அடிக்கடி இப்படித்தான் சுட்டுவார்.)
எனவே பூர்வமீமாம்சை, தர்க்கம், வ்யாக்ரணம், உபநிஷதம், அமரகோஶம், நிருக்தம் போன்ற கலைகளில் அறிவு இன்றி ஸ்ரீவைட்ணவ தத்துவங்களை அறிதல் இயலாது. இதை சன் தொலைக்காட்சியில் விவாதப் பொருளாக்குவது அறிவீனம் ஆகும். எந்த ஒருவரையும் புண்படுத்தாமல், இழி/வசவுச்சொற்களை கலக்காமல், நடுநிலையில் நின்று இரண்டு அல்லது மூன்று தத்துவங்க வாசிகளை மட்டும் விளக்குவேன்.
பாமரர்களுக்கு புரியும் வகையில் தருகிறேன்.

பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895

--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்

பாகம்-2. கைவல்யம்
15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலையில் உண்டியல் பணம் எண்ணுவதற்கு முன்னர் அவைகளை 5 பைசா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா,1 ரூபாய் என்று பிரிப்பார்கள். அவ்வாறு பிரிக்க சல்லடைகள் வைத்து சிறு அளவு முதல் பெரிய அளவு வரை சலித்து பிரிப்பார்கள். உள் சன்னிதியை வலம் வருகையில் ஒரே இரைச்சலாய் நீங்களும் கேட்டது/பார்த்தது நினைவிருக்கலாம்.
ஸ்ரீவைட்ணவத்திலும் அப்படி இரு அளவீடு ஜல்லடைகளை திருமால் வைத்திருக்கிறார். ஒரு ஜல்லடைக்குப் பெயர் கைவல்யம். மற்றொன்றுக்கு வைகுண்டம் என்று பெயராகும். சரி அந்த ஜல்லடைகளை ஏன் வைத்திருக்கிறான் என்று பார்ப்போம்.
ஆசார்யஹ்ருதயம்- சூர்ணை-11
----------------------------------------------------
“இவை கிட்டமும் வேட்டுவேளானும் போலே ஒண்பொருள் பொருளல்லாதவை என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநி சத்தைகளை உண்டாக்கும்.”

இங்கே சூர்ணையில் 1) கிட்டம் என்று ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் சொன்னதானது- இரும்பு, பித்தளை, தாமிர, வெள்ளி உலோகங்களால் செய்த பளபளப்பான ஒளிவீசும் பாத்திரங்களை ஈரக்காற்று படும்படி வைத்தால் அவற்றில் கிட்டம் பிடித்து ஒளியற்று கருப்பாகப் போகும். அவ்வாறே அனந்தமான ஞானமுள்ள ஜீவன், சம்சாரத்தில் பல்வேறு புலனுகர்ச்சியால், ஸம்ஸ்காரங்களால் அறிவு ஒளி இழந்து அறிவேயில்லாத அசேதனம்/ஜடப்பொருளுக்கு கிட்டத்தட்ட சமானம் போல ஆகிறான். (1% சைதன்யம் தான் வேலை செய்யும். மற்ற 99% ஞானம் மறைக்கப்பட்டுள்ளது)
2) வேட்டுவேளான் என்றொரு பூச்சி உண்டு. இப்படியொரு பூச்சியை கண்ணால் அடியேன் கண்டதில்லை. அடியேன் ஆசார்யர் பாண்டிச்சேரி.ப்ரவசன பாஸ்கரர் ஸ்ரீமத் உ.வே.D.A.Joseph ஸ்வாமிகளும் கண்டதில்லை என்றே ஆசார்யஹ்ருதய DVD ல் சொன்னார். எனவே ரிஷிகள் பார்த்து சொன்னதுதான். அது எங்கிருந்தோ புழுவினை கொணர்ந்து தன் கூட்டில் ஒட்ட வைத்துவிடும். தன் கொடுக்கினால் கொட்டு கொட்டென்று கொட்டும். பலநாட்கள் சென்ற பின்னர், அந்த புழுவும் சிறிய அளவு வேட்டுவேளானாக உருமாற்றம் பெற்று கூட்டிலிருந்து விடுபடும். இப்பூச்சி ஸ்ரீமத்பாகவத்திலும் காணப்பெறும்.
அவ்வாறே திருமால் ஜீவாத்மாக்களை இந்த சம்சார மண்டலத்தில் உடலென்னும் கூட்டில், ப்ராணனென்னும் கயிற்றால் ஒட்டி வைத்துள்ளான். நாம் அவன் தந்த ஶாசனங்களை மீறினால் துன்பம் தருகிறான் (கொட்டுகிறான்). பல்வேறு கோடி பிறப்புக்களில், பல்வேறு உயிரினங்களாகப் பிறக்கும் ஜீவன், அனைத்து ஜடப் பொருள்களிடமும் மஹாவைராக்யம் அடைந்து முடிவில் மோக்ஷம் பெறுகிறான்.
இந்த வேட்டுவேளான் செய்யும் பணிகளை மேலுமிரண்டு உதாரணங்கொண்டு விளக்கலாம்.
1)இத்தாலி-வாடிகனில் பல அற்புதமான சிற்பங்களைச் செதுக்கிய மைக்கேல் ஏஞ்ஜலோ என்றொரு பெரிய கலைஞர் இருந்தார். அவரிடம் ஒருவர் கேட்டார்-“ எப்படி உம்மால் கற்பாறையிலிருந்து பிரமாண்டமாக சிற்பங்கள் உருவாக்க முடிகிறது?”. அதற்கு மைக்கேல் சொன்னார்-“நான் ஒன்றும் உருவாக்குவதில்லை. அந்த உருவம் பாறைகளிலேயே உண்டு. நான் அதனை சூழ்ந்துள்ள தேவையற்ற பாகங்களை மட்டும் தட்டி/வெட்டி எறிகிறேன். சிற்பம் வெளிப்படுகிறது” என்றார்.

அவ்வாறே இவ்வுடலில் அந்தர்யாமியாய் இருக்கும் திருமால், தேவையற்ற கிட்டம் போன்ற “வீடு, மனைவு, மக்கள், ஆடை, ஆபரணம், உணவு, பதவி, வேலையாள், சுற்றம், வாகனம், கால்நடைகள்” இவை மீதான பற்றுக்கள் என்னும் மலங்களை வெட்டி வீசுகின்றான். ஜீவனும் தன் ஒரிஜினல் அறிவு வடிவில் ப்ரகாசிக்கிறான். “மனம் அக மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு” என்பது ஆழ்வார் வாக்கு.
2)ஆழ்வார் திருநகரிக்கு ஆண்டுதோறும் சென்று ஆழ்வாரையும், ஆதிநாத தம்பதியினரையும் சேவித்து ஆர்பரிக்கும் ஆட்களுள் அடியேனும் ஒருவன். இராப்பத்து சாற்றுமுறை நாளன்று ஆழ்வார் 108 குல்லாய்களும், 108 திருப்பரியட்டங்களும் அணிந்து மிகப் பெரியவராக காட்சியளிப்பார்.
பிறகு அர்ச்சகர்கள் ஒவ்வொரு குல்லாய்+ வஸ்த்ரங்களாகக் களைவார்கள்.
இறுதியில் ஆழ்வார் திருமேனி வெளிப்படும். அவரை பொலிந்துநின்றபிரான் திருவடியில் சமர்பிக்கிறார்கள். இவ்வாறே ஸ்ரீமன்நாராயணன் என்னும் அந்த வேட்டுவேளான் நம்மிடமிருந்து காமம், க்ரோதம், மோஹம், மதம், மாத்சர்யம் என்னும் அஹங்கார மமகார ரூபமான கிட்டங்களை களைந்து முழு ஞான வடிவினனாக ஆக்குகின்றான்.

அந்த வீடுபேறும் இரு வகைப்படும். ஒன்று கைவல்யம். அதாவது நம் சம்ப்ரதாயத்தில் தத்துவங்கள்(மாறாத உண்மைகள்) 3 ஆவன. 1) ஜடம், 2)ஜீவாத்மா, 3)பரமன்.
ஜடத்தின் மீது பற்றுக் கொண்டவன் வாழ்வது இந்த சம்சார கடல் ஆகும். அதில் கிடைக்கும் தற்காலிகமான ஆனந்தம் சுவைத்து, தர்மம் செய்தால் இன்பமும், அதர்மத்துக்கு கொட்டுதலும்(துன்பம்) பரிசாகப் பெற்று வாழ்கிறான்.
இதில் ஜடத்தின் மீது மட்டுமே வைராக்யம் கொண்டவன் வீடுபெற்றுச் செல்வது கைவல்யம் ஆகும். அதாவது தன் ஆத்மவஸ்துவில் கிடைக்கும் நிரந்தர ஆனந்தம் சுவைத்து மகிழ்கிறான். கேவலம் என்றால் வடமொழியில் மட்டும்(வெறுமனே) என்று பொருள். ஹிந்தியில் सिर्फ्, अकेला; ஆங்கிலத்தில் just, only ஜெர்மனியில் gerade, nur . வெறுமனே தன் ஆத்மாவை மட்டும் கொண்டு ஆனந்தப் படுவதனால் அன்நிலைக்கு கைவல்யம் என்று பெயராயிற்று.
केवते என்னும் மூலச்சொல்லுக்கு கைங்கர்யம், சேவை, தொண்டு, இன்பானுபவம் என்று வரும். இது कल: ப்ரத்யயம் பெற்று கேவலம் என்னும் பண்புப்பெயர் ஆகிறது. இதுவே தத்திதாந்த ப்ரத்யத்தில் கைவல்யம் என்னும் பெயர்ச்சொல் பெறும்.
[Kevalam - not connected with anything else, isolated, abstract, absolute, simple, pure, uncompounded, unmingled]

திருமூலர் திருமந்திரம், பதஞ்சலி யோகஶாஸ்திரம், கீதை முதலாறு அத்யாயங்கள் போன்ற நூல்களில் அஷ்டாங்க யோகம் பயின்று பல ஜன்மங்களாக, அப்யாசம் செய்பவர்கள் இறுதியில் அடைவது கைவல்யலோகம் ஆகும்.
ப்ரக்ருதிலயர், விதேஹலயர் என்று இதிலேயே இருபிரிவுண்டு. ஸம்ப்ரக்ஞாத ஸமாதி அடைந்தவர் விதேஹலயர் ஆவர். இவர்கள் சூக்ஷ்ம ஶரீரம் மட்டும் கொண்டவர்கள். இவர்களுடைய கர்மங்களும், சம்ஸ்காரங்களும் ஏறத்தாழ வைராக்கிய அப்யாசத்தினால் களைந்தவர்களாவர். இது prefinal stage.

அசம்ப்ரஞாதசமாதி அடைந்தவர்கள் ப்ரக்ருதிலயர் எனப்படுவர். இவர்களுடைய சூக்ஷ்மதேஹமும், இந்த ப்ராக்ருதமண்டலத்தில் விட்டு அதனால் கைவல்யம் சென்றவர்கள். Final stage. இவர்களுக்கு ப்ரக்ருத மண்டலத்திற்கு திரும்புதல் இல்லை.
இந்த கைவல்யலோகமானது ப்ரக்ருதி மண்டலத்தை கடந்து விரஜை நதிக்கு அருகில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாலி சென்றது இங்குதான் என்று கம்பநாட்டாழ்வார் வர்ணிக்கின்றார்.

தன்னடி தாழ்தலோடும் தாமரைத்
தடங்கண்னானும்
பொன்னுடை வாளை நீட்டி நீ இது
பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின
இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு
அப்புறத்து உலகன் ஆனான்.-
வாலிவதைப்படலம்- 152
தடங்கண்னானும்
பொன்னுடை வாளை நீட்டி நீ இது
பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின
இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு
அப்புறத்து உலகன் ஆனான்.-
வாலிவதைப்படலம்- 152
சேதிநாட்டரசன் ஶிஶுபாலன் நுழைந்த ஜல்லடைக்கும், வாலி நுழைந்த ஜல்லடைக்கும் வேறுபாடுண்டு. அந்த வைகுந்த, ஜல்லடையில் புகும் அளவினனாக மாறுவதற்கு கண்ணன் மீது வெறுப்பு/பகை என்னும் நினைவு வாழ்நாள் முழுதும் வேண்டியிருந்தது(அவ்ளோ டார்ச்சர்).
வாலியானவன் கைவல்ய ஜல்லடையில் நுழையும் வடிவினனாக மாற, யோகமார்கத்தில் சிறந்தவனாதலால் (7 மராமரம் உலுக்குதல் என்பது-மூலக்கனலால் 7 யோக ஆதாரங்களை வெற்றி பெற்றமை காட்டும்) முடிந்தது. ஸ்ரீராமர் மீது ராவணன் அளவுக்கு ஒரு வெறுப்போ / ஸுக்ரீவன்
அளவுக்கு விருப்பமோ (இரண்டில் ஏதாவதொரு நினைவு) இருக்கவில்லை.

அதாவது இந்த மீனவர்கள் கடலில் பெரிய வலையும் வீசுகின்றனர். பிறகு ஓடத்தினை வேகமாக ஒட்டுகின்றனர்/கலக்குகின்றனர். அதில் மீன்களும் சென்று மாட்டுகின்றன. அவ்வாறே திருமாலும் வினைகள் என்னும் வலைகளை செட்டப் செய்து ரெடியாக ஆங்காங்கே மாட்டி வைத்துள்ளார்.(ஐம்பொறிகள் என்றே விஷயங்களுக்குப் பெயராம்) இதனால் அவருக்கு எந்த பாவமும் சேராது.
இந்த கைவல்யம் என்னும் உலகில் நுழைய ஒருவிதமான ஜல்லடையை பயன்படுத்தி அதில் நுழையும் அளவுக்கு ஒருவனை விடாமல் கொட்டி கொட்டி திருந்துகின்றார் வேட்டுவேளான் என்னும் அந்தர்யாமி. அந்த ஜல்லடையில் நுழையும் அளவுக்கு அவன் திருந்தியதும் மோக்ஷமும் அளிக்கின்றார். இங்கு சல்லடை என்பதும் அதில் நுழையும் அளவு என்பதும் கற்பனையான விளக்கங்களாகும். சூக்ஷ்மஶரீரத்தில் ஒட்டியுள்ள கிட்டம் என்னும் ஸம்ஸ்காரங்களை யார் காண்பது ?
ஜலித்த பொருளை இன்னமும், வேறொரு முறை ஜலிப்பாருண்டோ ?

எனவே ஐம்புலன்களும், மனமும், அஹங்காரமும் இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் விடுத்து கைவல்யலோகம் செலுத்தப்பட்ட ஆத்மாவானது தன்னில் இருக்கும் நிரந்தரமான ஆனந்தத்தினை அனுபவிக்கும் நிலை.
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீக்கி,
நலம் அந்தம் இல்லதோர் நாடு புகுவீர்
நலம் அந்தம் இல்லதோர் நாடு புகுவீர்
அடுத்து வைகுண்டம் செல்லவேண்டிய ஜல்லடையினைக் காண்போம்.
********************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
********************************************/
--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
********************************************/
******************************************************/
******* வடகலை vs தென்கலை *********

பாகம்-3. வைகுண்டம்- த்வரை (அ) அவா
[குறிப்பு:- கைவல்யம் பற்றி சென்ற பகுதியில் கண்டோம். அப்படி “கைவல்யம் சென்றவன் சிறிது காலம் அங்கே இருப்பான். பிறகு அங்கிருந்து வைகுண்டம் செல்வான்” என்பது வடகலையாரின் கருத்து ஆகும்.

இல்லை ! “கைவல்யம் சென்றவன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவான். வைகுண்டம் செல்ல முடியாது” என்பது தென்கலையாரின் கருத்து ஆகும்.]
இதில் எது சரி என்பதற்கு முன்னர் சென்ற பகுதியில் கைவல்யம் சென்ற ஒரு ஜல்லடையைப் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது வைகுண்டம் செல்ல மற்றொரு ஜல்லடையை பெருமாள் பயன்படுத்துகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கைவல்யத்தில் ஒரு ஜீவாத்மா எப்படி ஆனந்தம் அனுபவிக்கிறான் என்பதை பெருமாள் ஆழ்வாருக்கு 8 ஆம் பத்து-8 ஆம் திருவாய்மொழியில்
“கண்கள் சிவந்து “ பதிகத்தில் காட்டுகின்றார். அதை விருப்பின்றி/வெறுப்பாக கண்டு அதைப்பற்றி ஒரு மண்ணும் விளங்கவில்லை என்று அவரே சொல்கிறார். திருமால் தான் வேண்டும் என்று விடாப்படியாக நிற்கின்றார். பிறகு பெருமாள் அவருக்கு “கருமாணிக்க மலைமேல்” என்னும் 9 ஆம் பதிகத்தில் விரும்பிய கலவியினை அருளினார். அதற்கும் மேலாக பாகவதர் அடிமையே அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் என்று “நெடுமாற்கடுமை” என்னும் 10 ஆம் பதிகம் பாடுகின்றார்.

இப்படி ஜீவ அநுபவம், பரமனின் அநுபவம், பாகவத அனுபவம் என்று 3 பதிகங்களில் ஒன்றைவிட இரண்டாவது சிறப்பானது. அதனை விட மூன்றாவது சிறப்பானது என்று மாறியதற்கு, ஆழ்வார் பூலோகத்தில் இருந்தது ஒரு காரணமாகும். அவருக்கு மனமும், அஹங்காரமும், புத்தியும் இருந்தது. கைவல்யத்தில் இம்மூன்றும் கிடையாமையால் இப்படி Good, Better, Best என்று ஒப்பிட்டுப் பார்க்க முடியவே முடியாது.
ஆக ஒருவர் 1)ஜட தத்துவத்தை விரும்பினால் எம்பெருமான் சம்சார லோகத்தில் வைக்கிறான். அவன் புலனுகர்ச்சியினால் அறிவு மங்கி கிட்டத்தால் (சம்ஸ்காரத்தினால்) அந்த ஜடபொருள் மாதிரியே ஆகிறான். ஜ்டப்பொருள் ஸ்வரூபம் மாறக்கூடியது. அவனும் பலபிறவிகளில் பிறந்து இறத்தல் என்னும் சக்கரத்தில் சிக்கி ஜடம்போலவே வாழ்கிறான்.
ஜடத்தின் மீது மட்டும் வைராக்கியம் பிறந்து, ஜீவாநுபவத்தைஆசைப்படுகிறான். பெருமாளும் அவனுக்கு கைவல்யம் அருளுகின்றான். கைவல்யத்தில் அவன் ஜீவனின் உள்ள நிரந்தர இன்பத்தை அனுபவிக்கிறான். ஜீவாத்ம தத்துவம் ஸ்வரூபத்தில் மாறாதது. ஸ்வபாவத்தில் மாறக்கூடியது. (அறிவு குன்றுவதும், விரிவதும் ஆக இருக்கும்).அங்கு நிரந்தரமாக தங்கிவிடுகிறான்.
ஜட அனுபவம் மற்றும் ஜீவாத்ம அனுபவம் ஆகிய இரண்டின் மீதும் வைராக்கியம் பிறத்தல் வேண்டும். அதே சமயத்தில் திருமால் மீது த்வரை/அவா வளர வேண்டும். அந்தத் த்வரையானது/ ப்ரக்ருதி மண்டலத்தை விட பெரிதாக ஆக வேண்டும். அப்பொழுது அவனுக்கு வைகுண்டம் தருகிறான்.
விஶ்வாமித்ரர் முன்பு சித்தாஶ்ரமத்தில் விருப்புடன் ஆஶ்ரமம் அமைத்து வாழ்ந்தது போல ஆழ்வாரும் “மண்ணையிருந்து துழாவி வாமனன் மண் இது” என்று அவா 4 ஆம் பத்தில் சிறிது சிறிதாக வளர்கிறது.
இறுதியாக
இதனை
இறுதியாக
இதனை
“சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா “

அவருக்கு திருமால் மீதிருக்கும் அவாவின் அளவு ஜடப்ரக்ருதியின் அளவை விடவும் பெரிதாகிறது(முதல் வரி), ஜீவாத்ம ஞான அளவை விடப் பெரிதானது(இரண்டாம் அடி)
இறுதியில் பெருமாளை விடப் பெரிதாக வளர்ந்து நிற்கிறது (மூன்றாம் அடி).
பின்னரே வைகுந்தம் பெற்றார்.
********************************************************/
த்வரைக்கு சில உதாரணங்கள் தருகிறேன்.
அடியேன் வேலூரில் எஞ்சினியரிங் படித்த பருவம். ஒரு பட்டர் எங்களுக்கு கோதாஸ்துதி, ஶ்ரீஸ்துதி, ரகுவீர கத்யம், கோபால விம்ஶதி என்று சந்தை எடுத்தார். அவற்றுக்கு பொருள் தெரியவில்லை. பொருளை அறிய ஆசை மனதில் அரித்துக் கொண்டே இருந்தது. ஒருமுறை வாரவிடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தேன். திங்களன்று காலையில் தாயார் ப்ரஸாதம் கட்டி கல்லூரிக்கு அனுப்பினார். அடியேனோ சென்னைக்கு பஸ் ஏறினேன். நேராக T.நகர் லிப்கோ புத்தக கடையில் “தேஶிக ஸ்தோத்ர மாலா” வாங்கிய பின்னரே வேலூரை வந்தடைந்தேன். இது ஞானத்தின் மீதிருந்த ஆசை.

ஸ்ரீராமாநுஜருக்கு மந்த்ரோபதேசம் மீது அவா இருந்தது. திருக்கோஷ்டியூர் நம்பிகள் 18 முறை திருப்பியனுப்பியும் விடாமல் சென்று இறுதியில் கற்றது, சம்ப்ரதாய விஷயங்களில் காட்டிய அவரது த்வரை.
12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு சேவித்து 4000 கற்றது ஸ்ரீமன்நாதமுனிகளின் அவா. ஆசார்யனைத் தேடி 90 வயதில் வடநாடு சென்று, மீண்டும் குருகூரை அடைந்து, ஶடகோபரைக் கண்டு “ தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி” என்று சித்தி பெற்றது மதுரகவிகளுக்கு ஆசார்யன் மீதிருந்த அவா.

திருமலையில் பெரியதிருமலை நம்பிகளுக்கு சிஷ்யனாய் எம்பார்(கோவிந்தன்) வாழ்ந்த காலத்தில் நாள்தோறும் வைக்கோலால் மெத்தை செய்து, அதில் படுத்துப் பார்த்து ,ஏதாவது முள் இருக்கிறதா, சுகமா தூக்கம் வருமா என்று சோதனையிடுவார். இதனை கடிந்தார் ஸ்ரீராமாநுஜர். குருதல்பம் என்னும் பஞ்சமஹாபாவம் என்றார். ஆயினும் மறுத்த எம்பார்- “அடியேன் நரகம் செல்றாலும். ஆசார்யர் சுகமாகத் தூங்குவாரே” என்றார். ஆசார்யர் சுகமாய் வாழ்வேண்டும் என்னும் அவா.
தன் பார்வையிழந்து பெரியபெருமாளை சேவிக்க வந்தார் கூரத்தாழ்வான். வாயில்காப்போர் ராமாநுஜ சம்பந்திகளுக்கு தர்ஶனம் செய்ய அனுமதியில்லை என்று மறுத்தனர். “இவர் ஆத்மகுணம் மிக்கவர்” இவரை மட்டும் அனுமதிக்கலாம் என்றார் மற்றொரு வாயில்காப்பாலன். மறுத்த கூரேஶர் திருமாலிரும்சோலையில் 13 வருடங்களாக உடையவர் வருகைகாக காத்திருந்தது ஆசார்யன் மீதிருந்த பற்று.
நாம் அநுதினமும் திருவாராதனம் செய்வதும் , அவன் திருமேனி மீது அவா வளரச் செய்யவேதான். அருளிச் செயல்கள் சேவிப்பதும் அவற்றின் மீதும் ஆழ்வார்கள் மீது அவா வளரத்தான். வ்யாக்யானங்கள் காலக்ஷேபம் செய்வதும் அதற்குத்தான். “யஜுஶ் ஶாகா அத்யாயீ” என்று அபிவாதனம் செய்கிறோமே – அதிலும் யஜுர்வேதத்திலிருந்து அனுதினமும் ஒரு பஞ்சாதி சேவிப்பவன் என்னும் self explanation தான்.
ஆழ்வாருடைய 16 ஆம் வயதில் வைகுந்தத்தில் அளிக்கும் சேவையைத் தந்துவிட்டு மறைந்தார் பெருமாள். இது பரதனை கைகேயி “ஹே ராஜன் ! , ஸ்ரீராமனை 14 வருடங்கள் காட்டிற்கு அனுப்பி உனக்கு மகுடத்தை வரமாக வாங்கியிருக்கிறேன் ! முடிசூட்டிக்கொள்” என்ற தாயை வெறுத்தார். அவர் தமையனை பிரிந்து துடித்த துடிப்பு திருவிருத்தம் ஆகும்.
பின்னர் சித்ரகூடத்தில் அண்ணனை சந்தித்து பரதன் மகிழ்ந்தது போன்ற நிலை ஆழ்வாருக்கு திருவாசிரியம் ஆகும். 14 வருடங்கள் காத்திரு என்று பரதனுக்கு பாதுகைகளை கொடுத்து, பிடிவாதமாகத் திருப்பியனுப்பினார் பெருமாள். “நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமன காங்க்ஷயா” என்று பரதன் தவித்த நிலை ஆழ்வார்க்கு பெரிய திருவந்தாதியில் அமைந்தது. இறுதியில் அயோத்தி திரும்பி மகுடம் புனைந்து பரதனை இளவரசாக்கி உடன் கூடியிருந்து மகிழ வைத்தார். அதே நிலை திருவாய்மொழியாகும்.

இப்படி த்வரை/அவா இருந்தாலன்றி வைகுந்தம் செல்ல வாய்ப்பில்லை . கைவல்யத்தில் ஆத்மாவைப் தவிர வேறொன்றில்லையால், மீள முடியாது. இதுவே தென்கலை தரப்பு வாதம் ஆகும்.
வைகுந்தம் செல்ல வேண்டி புகும் ஜல்லடையினை அடுத்த பகுதியில் காண்போம்.
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்-4. கைவல்யம் சென்றவன் வைகுந்தம் செல்ல முடியுமா ?
---------------------------------------------------------------------------------/
சிலமுறைகள் பாண்டிச்சேரி வைணவச்சுடராழி, ப்ரவசன பாஸ்கரன்.ஶ்ரீமத்.உ.வே. D.A.Joseph ஸ்வாமிகள் அடியேனுடைய குடிசைக்கு பொன்னடி சாத்தியிருந்தார். ஞானசூரியனான அவரிடம் ஞானசூன்யமான அடியேன் மனதிலுள்ள பல சந்தேகங்களை தீர்த்து வைக்க பிராத்திப்பதுண்டு. அப்படி கேட்க கேள்விகளில் ஒன்றுதான் “கைவல்யம் சென்ற ஒருவன், வைகுண்டம் செல்லமுடியுமா ?”- என்பது பின்வருமாறு.

“ஸ்வாமின் ! எங்கள் வடகலையார் சொல்வது தான் இந்த விஷயத்தில் சரியென்றே நினைக்கிறேன் ! ஏனெனில், பெருமாளும் தாயாரும் எல்லையற்ற கறுணை மிக்கவர்கள். ஆகவே மிக உயரிய பதவியான வைகுந்தத்தினை பெரிய மனது வைத்து கொடுக்கலாமே. அந்த ஜீவன் வைகுந்தம் பற்றி அறியாதவனாய் இருந்தால் என்ன ? கைவல்யத்தில் விழுந்து தொலைந்தவனாய் இருந்தால்தான் என்ன?” என்றேன்.
அதற்கு ஸ்வாமி –“அப்படியானால் அந்த திவ்யதம்பதியருக்கு கருணை வந்து நாம் அனைவருக்கும் உடனே உயர்ந்த பதவியான வைகுந்தம் தந்து லீலாவிபூதியை ஒரு நொடியில் காலி செய்துவிடலாமே” என்றார்.
போற்றி மற்றோர் தெய்வம் பேணப்
புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
உலகில்லை என்றே,
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
அறிந்து அறிந்து ஓடுமினே - திருவாய்மொழி-4-10-6

ஸர்வ முக்தி ப்ரசங்கம் (எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை) என்னும் தோஷம் விளையும் என்றார். DAJ ஸ்வாமியிடம் பிடித்தது இந்த SPONTANEOUS பதில்தான். deyeje@yahoo.com என்னும் முகவரிக்கு ஈ-மெயில் அனுப்பினால், உங்கள் வினாக்களுக்கும் சரியான விடை கிடைக்கும்.
அதன்பிறகு அந்த ஆசார்யர் சொன்னதையே வேதமாகக் கொண்டேன்.
----------------------/
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில், கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு வர்ணனை உண்டு. இந்த வாலி ஒரு மராமரத்தினை உலுக்கி, அதிலுள்ள அனைத்து இலைகளையும் உதிரச் செய்வானாம் ? அப்படி மொத்தம் 7 மராமரங்கள் அங்கும் இங்குமாக கிஷ்கிந்தையில் உண்டு. ஸ்ரீராமர் ஏன் 7 மராமரங்களை துளையிட வேண்டும் ? இதில் ஏதோ தத்வசூக்ஷ்மம் உண்டென்று அடியேன் மரமண்டைக்கு உறுத்துக் கொண்டே இருந்தது. கம்பராமாயணம் சேவித்தபொழுது, அவருடைய வர்ணனை ஒப்பிட்டுப் பார்த்த பொழுது தான் தெரிந்தது, அந்த 7 மரங்களும் நம் உடலில் இருக்கும் 7 மூலாதார யோகச்சக்கரங்கள் என்று. யுரேகா ! வாவ் ! ஹூ…..ஹூ…ஹூ…….என்று கூவினேன்.

[குறிப்பு: -அடியேன் தினமும் பெருமாள் திருவாராதனம் செய்பவன். ஆழ்வார் பாசுரங்களை உயிராக நினைப்பவன். இந்த தத்துவ ஆராய்ச்சி எப்படி உண்மையோ அதை விட 1000 மடங்கு ராமாவதாரம் உண்மை. அவருக்கு திருமேனி உளதென்பதும் உண்மை. 7 மராமரங்களும் இருந்தன. வாலியும் இருந்தான். ஸ்ரீராமாயணமும் நடந்த கதை தான்.
நாத்திகரும் நல் கலையின் நன் நெறிசேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே!
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என் விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்” .

ஆகவே ஆத்திகரை மட்டுமே நம்ப வேண்டும்.
]
மேற்சொன்ன ஸ்ரீராமாயண ஆராய்ச்சி, முறையில் கைவல்யம் சென்றவன் வைகுந்தம் செல்ல முடியுமா என்னும் பிராதுக்கும், கிஷ்கிந்தாகாண்டத்தில், ஆதிகவி தந்த ஒரு தீர்ப்பினை கண்டேன்.
அதனை அடுத்த கட்டுரையில காணலாம்.
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
********************************************/
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
********************************************/
--தொடரும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திஎருவடிகளே சரணம்
ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்- 5- ஸப்தஜன ஆஶ்ரமம் என்பது கைவல்யமா ?
ஸப்த ஜன ஆஶ்ரமம் அங்கிருந்து மீள முடியுமா ?

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்- கிஷ்கிந்தா காண்டம் -13 ஆவது ஸர்கம்
---------------------------------------------------------------------------------------------

முதன்முறையாக வாலியுடன் பொருது, அவனால் நன்றாக தகையப்பெற்று, குருதி சொட்ட மதங்க வனத்தில் ருஶ்யமூக பர்வதத்திற்கு மீள்கிறார் சுக்ரீவ மஹாராஜர். “ஸ்ரீராமா ! தாங்கள் சபதம் செய்தபடி வாலியை ஏன் கொல்லவில்லை “ என்று அதிருப்தியுடன் வினவுகின்றார். அதற்கு –“ இருவருக்கும் வித்யாசம்(வாசி) தெரியவில்லை” என்று ஸ்ரீராமரும் அவரை சமாதானம் செய்கிறார். லக்ஷ்மணரும் கஜபுஷ்பி என்னும் கொடி-மலர்களால் மாலை செய்து அணிவிக்கின்றார். அதன் பின்னர் மீண்டும் கிஷ்கிந்தைக்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு வழியில், தூரமாகத் தென்பட்ட “ஸப்த ஜன ஆஶ்ரமம்” என்னும் கண்ணுக்கு விருந்து தரும், காட்சியினை கண்டு குதூகலத்துடன்–“அது என்ன என்று ஸ்ரீராமர் கேட்டலும், அதற்கு சுக்ரீவ மஹாராஜர் தரும் மிக அழகிய விளக்கமும்” பின்வருமாறு.
சுக்ரீவ மஹாராஜர் அனைவருக்கும் முன் சென்றார். பின்னால் லக்ஷ்மணரும் ஸ்ரீராமரும் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து தைரியமுள்ள ஹநுமான், நளன், நீலன் மற்றும் தாரன் ஆகியோர் பின் தொடர்ந்தனர். அப்பொழுது வழியில் ஸ்ரீராமர் கேட்கிறார்.
ஏஷ மேக இவ ஆகாஶே வ்ருக்ஷஷண்ட ப்ரகாஶதே |
மேகஸங்காத விபுல பர்யந்த கதலீ வ்ருத: || -14
கிம் ஏதத் க்ஞாதும் இச்சாமி ஶகே கௌதூஹலம் மம |
கௌதூஹல அபஹநயநம் கர்தும் இச்சாமி அஹம் த்வயா || -15

பொருள்: - ஆகாயத்தில் நீலவண்ண மேகக்கூட்டம் விஸ்தாரமாக லிளங்குவதைப் போல ,மரங்களின் கூட்டம், புதர் கொடிகளோடு கூடியதாய் ,அதைச் சூற்றிலும் வாழை மரங்களால் சூழப்பட்டதாக பளிச்சென்று காணப்படுகிறது. நண்பா ! புதுமையாகக் காணப்படும் இது என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்குள் ஆர்வம் பொங்கியெழுகின்றது. இந்த ஆர்வம் தீர ,அதனைப் பற்றி நீதான் விளக்கவேண்டும்.
தஸ்ய தத் வசநம் ஶ்ருத்வா ராகவஸ்ய மஹாத்மந: |
கச்சன்ந ஏவ ஆசசக்ஷே அத ஸுக்ரீவ தத் மஹத் வநம் ||-16
ஏதத் ராகவ விஸ்தீர்ணம் ஆஶ்ரமம் ஶ்ரமநாஶநம் |
உத்யான வன சம்பன்னம் ஸ்வாது மூல பலோதகம் ||-17

பொருள்:-மகிமை பொருந்திய ஸ்ரீராமருடைய அந்தச் சொற்களைக் கேட்டு நடந்துகொண்டே அந்த மாபெரும் காட்டின் விஶேஷத்தினை பின்வருமாறு சுக்ரீவ மஹாராஜர் சொன்னார். ஸ்ரீராமபிரானே ! விசாலமான இந்த ஆஶ்ரமம் களைப்பை போக்கவல்லது. பூஞ்சோலைகள் நிறைந்தது. சுவைமிக்க கனி-கிழங்கு-குடிநீர் உடையது.
அத்ர ஸப்தஜநா நாம முநய: ஶம்ஶித: வ்ரதா : |
ஸப்த ஏவ ஆஶந அத ஶீர்ஷா நியதம் ஜல ஶாயிந: ||-18
ஸப்த ராத்ரே க்ருதாஹாரா வாயுநா அசல வாஸிந: |
திவம் வர்ஷ ஶதை: யாதா: ஸப்தபி: ஸகலேவரா: ||-19
பொருள்:- இவ்விடத்தில் ஸப்தஜனம் என்று பெயர் பெற்ற ஏழு முனிவர்கள், தலைகீழாகத் தொங்கிக் கொண்டும், தண்ணீருக்குள்ளே வசித்துக் கொண்டும், கடுமையான விரதங்களை மேற்கொண்டவர்களாக நியமத்துடன் இருந்து வந்தனர். காட்டில் வசித்த இவர்கள் , ஏழு நாள்களுக்கு ஒரு முறைதான் வாயுவையே ஆகாரமாகக் கொண்டார்கள். (மற்ற ஏழு நாள்கள் மூச்சை அடக்கி கும்பகம் பயின்றார்கள்). இவ்விதமாக ஏழுநூறு ஆண்டுகள் தவம் செய்தபின்னர், தத்தம் சரீரங்களுடையே மேலுலகம் சென்றார்கள்.
ஆராய்ச்சி:- இங்தக் கதையால், நமக்கு சொல்வது யாதெனில், ஆஶநம், ப்ராணாயாமத்தினால் , மூலக்கனலை (குண்டலினியை) எழுப்பி, அதனை ஏழு சக்கரங்களுக்கு படிப்படியாக செலுத்தி, இறுதியில், கைவல்யம் செல்லும் சித்தர்கள் குறிக்கப்படுகின்றனர். சரீரங்களுடன் சென்றது, “நான் யாருக்கும் அடிமையில்லை”- நான் என ஆத்மா அநுபவத்தில் திருப்தியுடன் இருப்பேன்” என்னும் ஸ்வாதந்த்ர்யம் சுட்டப்படுகின்றது. இது பக்தி மார்கத்திற்கு விரோதமானது. இதைத்தான் திருமூலரும், பதஞ்சலி ரிஷியும் சொல்லிக் கொடுத்தது. டுபாக்கூர் ரவிசங்கர், சத்குரு டிமிக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் போன்ற கழிசடைகளும் இதைதான் சொல்லித் தருவதாக உலகை ஏமாற்றுகின்றனர். பணம் பண்ணுகின்றனர். அவர்கள் உபதேசத்துக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை.
தேஷாம் ஏதத் ப்ரபாவேண த்ரும ப்ராகார ஸம்வ்ருதம் |
ஆஶ்ரமம் ஸுதுராதர்ஷம் அபி ஸ: இந்த்ரை: ஸுரா அஸுரை: ||-20
பக்ஷிணோ வர்ஜயந்தி ஏதத் ததா அந்யே வநசாரிண: |
வீஶந்தி மோஹாத் யே அபி அத்ர ந நிவர்தந்தே தே புந: ||-21

பொருள்:- இப்படிப்பட்ட மஹிமை பொருந்திய அவர்களுடைய இந்த ஆஶ்ரமம், மரங்களையே மதிற்சுவராக உடையது. இந்திரன் முதலான தேவர்களாலும் அசுரர்களாலும் உட்புக முடியாதது. பறவைகளும் மற்ற காட்டுப் பிராணிகளும் இந்த இடத்தை தவிர்த்து விட்டுச் செல்கின்றன. , இந்த ஆஶ்ரமத்தின் ரகசியம் தெரியாமல் , இதனுள்ளே புகும் உயிர்கள் மீண்டும் திரும்புவதில்லை. தேவர்களாலும் புக முடியாது என்பது மோக்ஷ வீடு என்று பொருள் தரும். வைகுன்டத்தைக் கூட அயோத்யா, அபராஜிதா( யுத்தத்தில் வெல்ல முடியாத நாடு) என்பர். ஏனெனில் அதுவும் மோக்ஷலோகம் ஆகும். சித்தி அடைந்தவரால் தான் புக முடியும்.(அதைத்தான் இரண்டு வித ஜல்லடைகள் என்றேன்)
ஆராய்ச்சி:- இந்த ஆஶ்ரமம் மரங்களையே மதிளாகக் கொண்டது என்பதனால், அந்த கைவல்யமானது ப்ரக்ருதி மண்டலத்தை ஒட்டி உள்ளதென அறியலாம். தேவர்கள்/அசுரர்களாலும் புக முடியாது என்பதும், அதில் புகுந்த உயிரினங்கள் திரும்புவதில்லை என்பது கைவல்ய லோகம் சென்றவர் வேறு எங்கும் செல்ல முடியாது என்று குறிக்கிறது. அதுவே இறுதி இலக்கு என்றும் சுட்டுகின்றது.
விபூஷன ரவா ச அத்ர ஶ்ரூயதே ஸகலாக்ஷரா: |
தூர்ய கீத ஸ்வநாதா ச அபி கந்தோ திவ்ய: ச ராகவ: || -22

பொருள்:- ரகுநாயகா ! இந்தக் காட்டில் மங்கையர்கள் நடனாமாடும் பொழுது எழும் அணிகலங்களின் ஒலியும், மங்களகரமான இசையும், பேரிகை மற்றும் மற்ற இசைக்கருவிகளின் இனிய ஒலிகளும் கேட்கப் படுகின்றன. இங்கே திவ்யமான நறுமணங்களும் வீசுகின்றன.
ஆராய்ச்சி:- யோகமார்கத்தில் செல்பவர், தாம் சரியான வழியில் தான் பயணம் செய்கிறோமா என்று அறிய -பதஞ்சலி யோக சூத்திரத்தில் சில அளவீடுகள் உண்டு. காரணமேயில்லாமல், திடீர் திடீரென நல்ல நறுமணத்தை அறியலாகும். இசையும் கேட்கலாம். உயர கிளம்புவது போலவும் தோன்றலாம். இது எதைக் குறிக்கிறதெனில், விஷய சுகங்களினால் நாம் பெறும் ஆனந்தம் என்பது ஆத்மாவிலேயே உள்ளது. அதை நாம் தான் தவறாக இன்பம் ஆத்மாவுக்கு வெளியே உள்ளதாக உணர்கிறோம். யோக மார்கத்தில் அடையும் படிநிலைகளின் சித்தியையும் குறிக்கும்.
த்ரேதாக்நயோ அபி தீப்யந்தே தூமோ ஹ்யேஷ இஹ் ப்ரத்ருஶ்யதே|
வேஷ்டயன் இவ வ்ருக்ஷாக்ராந் கபோதாங்க அருணோ கந: || -23
ஏதே வ்ருக்ஷா ப்ரகாஶந்தே தூம ஸம்ஶக்த மஸ்தகா: |
மேகஜால ப்ரதிச்சந்நா வைதூர்ய கிரயோ யதா || -24

பொருள்:- இங்கே 3 அங்கிகளும் (கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆஹவநீயம்) எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதனால் ,புறாவின் உடல்நிறம் போல செம்மையான புகைக்கூட்டம் மரங்களின் நுனிகளைச் சூழ்ந்துகொண்டு காணப்படுகிறது.
ஆராய்ச்சி:- சாந்தோக்யத்தில் உபகோஶல வித்யையில் இந்த 3 அக்னிகளும் சேர்ந்து ஸத்யகாம ஜாபாலரின் சிஷ்யன் உபகோஶலனுக்கு ப்ரம்மவித்யை சொல்லிக் கொடுக்கின்றனர். அதில்- “ கம்(कम्) என்பது ப்ரஹ்மம் ஆகும். க்கம் खम् என்பதும் ப்ரஹ்மம் ஆகும்.
க(क) என்பது சுகத்தைக் குறிக்கும். க்க (ख)என்பது ஆகாஶத்தைக் குறிக்கும்.” என்றனர். அப்பொழுது உபகோஶலன் ப்ராணன் என்பது ப்ரஹ்மம் என்று புரிகிறது.

குரு ப்ரணாமம் தர்மாத்மந் தேஷாம் உத்திஶ்ய ராகவ: |
லக்ஷ்மணேந ஸஹ ப்ராத்ரா ப்ரயத: ஸம்யதாஞ்ஜலி: || -25
ப்ரணமந்தி ஹி யே தேஷாம் ருஷீணாம் பாவிதாத்மநாம் |
ந தேஷாம் அஶுபம் கிஞ்சித் ஶரீரே ராம த்ருஶ்யதே ||

பொருள்:- தர்மத்திற்கு உயிரானவனே ! ராமசந்திரா ! அந்த முனிவர்களை கருத்தில் கொண்டு , மனமொன்றி, இரு கைகளையும் கூப்பி, இளையவர் லக்ஷ்௳ணருடன் நமஸ்காரம் செய்யுங்கள். ஆத்மஞானிகளாகிய அந்த முனிவர்களை வணங்கிப் பணிபவர்களுக்கு உடல்நோய் எதுவும் உண்டாவதில்லை.
இவ்வளவு குதூகலமாக அங்கு செல்ல விரும்பிய ஸ்ரீராமரை ஸுக்ரீவர் அழைத்துச் செல்லவில்லை. அங்கு புகவே முடியாது என்பதும், புகுந்தவர் மீளமுடியாது என்பதும் பொருள். ஸ்ரீராமரால் மட்டும் புகுந்து மீளமுடியும். ஏனெனில் அவர் பரமாத்மா. இருந்தும் ஏன் அவர் புகவில்லையெனில் அவதார ரகசியம் குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதனால் போகவில்லை.

முடிவாக
“ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே”
“ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே”
- என்று கண்ணன் எம்பெருமான் கீதையில் சொன்னதுபோல இங்கு மூப்பு, மரணம், நோய், சோகம் , பசி, தாகம் என்னும் அறுவகை துன்பங்களும் அண்டாது என்று கைவல்யத்தை ஆதிகவி குறிப்பாக சுட்டுவதை அறியலாம்.
மண்டோதரியானவள் ராவணன் இறந்தபின்னர், ஸ்ரீராமரை ஶ்ரீயப்பதி என்றும் சங்கு, சக்கரம், கதையும் தாமரையும் கொண்ட ஸ்ரீமந்நாராயணன் என்றும் ஸ்தோத்ரம் செய்தாள். ஸ்ரீராமரானாவர் ரிஷிகளுக்கு தர்மமும், விபீஷணருக்கு அர்த்தமும், சுக்ரீவருக்கு காமமும், ஜடாயுவுக்கு வைகுந்தமும் ,தனக்கு கைவல்யமும்(அதாவது) வைதவ்யம் என்னும் விதவைக்கோலமும் கொடுத்ததாகக் கூறுகின்றாள்.
ஆம் ! “பதிம் விஶ்வஸ்ய” – இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அவனே கணவன் என்பது புருஷ்சூக்தம் ஆகும். அவனை மறந்து கைவல்யத்தில் வாழும் அமங்கலத்தினை வைதவ்யம் என்பது சரிதானே !
கடவல்லியில், மணமகளாகிய ஜீவாத்மாவினை, திருமந்திரம் என்னும் மாங்கல்யம் தந்து, மணந்து கொண்டு, இச்சரீரம் விட்ட பின்னர், ஆதிசேஷ ஶயனத்தின் மீதேற்றி தம் மடியில் வைத்து அணைத்து பரமானந்தம் தருவது, மஹாவிஷ்ணு என்னும் அழகிய மணவாளன் என்று பரயங்க வித்தை கூறும். அதை இழப்பது விதவைக்கோலம் என்னும் அமங்கலம் தானே.
இனி அக்கோலத்தினை, உயிர்க்கோல்லி நோயாக வர்ணித்து அப்பக்கம் போகாதீர்கள் என்று , திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் கைவல்யத்தினை இகழ்ந்து கூறுவதை தொடர்ந்து காண்போம்.
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
பாகம்- 6
1.)கைவல்யம் சென்றவர்கள் திரும்பமாட்டார்கள் என்று திருப்பல்லாண்டு 4 ஆம் பாசுரத்தில் பெரியாழ்வார் அத்தகைய அனுபவத்திற்கு ஆசைப்படுவர்களை எச்சரிப்பது பின்வருமாறு……..
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய
நமோ நாராயணாய என்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
வந்து பல்லாண்டு கூறுமினே
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய
நமோ நாராயணாய என்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
வந்து பல்லாண்டு கூறுமினே
ஏ கைவல்ய மோக்ஷத்தினை அடைய விரும்பும் மனிதர்களே !
கைவல்ய லோகத்தில் ஆசையை விட்டு வந்து, அந்த கைவல்யம் மற்றும் ஐஶ்வர்யம் என்னும் பகவானைத் தவிர்ந்த வேறு எதையும் ஆசைப்படாத (அநந்ய ப்ரயோஜநரான) எங்களுடைய கோஷ்டியிலே ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பத்தினை உடையவர்களாக இருக்கின்றீர்களா ! அப்படியானால் ,
பொல்லாத ஸ்தானமாகிய கைவல்ய லோகத்திலே உங்களைக் கொண்டு தள்ளுவதற்கு முன்னே [ஶரீரம் விழுவதற்கு முன்னரே]
(ஆத்மாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற) வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து
சீக்கிரமாக எங்களோடு சேர்ந்து விடுங்கள்.

(அப்படியே சேர்ந்தபின்பு) நாட்டிலுள்ளவர்களும் (உயர்ந்த ஞானமுள்ளவர்கள்) நகரத்திலுள்ளவர்களும் (உயர்ந்த ஞானமில்லாதவர்கள்) ஆகிய இரு கோஷ்டியினரும் உங்களுடைய பெருமையினை அறிந்து கொள்ளும்படி திருமந்திரத்தைச் (அஷ்டாக்ஷரம்) சொல்லி
திருமாலின் பெருமையினை பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள் சேர்ந்தவர்களாயிருந்து
(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்.

வெறுமனே ஓங்காரத்தை மட்டும் ஜபிக்கும் நீங்கள் அத்துடன், அந்த ஓங்காரத்தின் விளக்கமான நம: மற்றும் நாராயணாய என்னும் பதங்களையும் சேர்ந்து ஜபியுங்கள்.
ஏடுநிலம் என்று கைவல்யஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; கூறுவோம்; அதற்கு பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள் கொடுத்தார் ஆழ்வார். மேலும், ஏடு == ஸூக்ஷ்மசரீரமானது, நிலத்தில் - தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே, இடுவதன் முன்னம் -லயிப்பதற்கு முன்னே, என்றும் பொருள் கொள்ளலாம். ஸ்தூல சரீரமென்றும் ஸூக்ஷ்ம சரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்;
ஸூக்ஷ்ம சரீரம்
--------------------------
பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்;

ஸ்தூலசரீரம்
-----------------------
தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் - ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.

ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீ ஸ்நாநத்தால் நீங்கிய பின்பு தான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும். இவ்விரண்டில் எதையடைந்த பின்பும் திரும்பி வருதல் இல்லை. (இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற் காட்டிலும் பிரதானமாய் அதனுடைய ஸாரமுமாயிருப்பதால், பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி ‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும். ‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது. வரம்பொழியவந்து என்றபடி. இவ்விடத்தில், வரம்பாவது - அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை; ‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது; பகவானை அநுபவிக்கப்போகக்கூடாது’ என்று நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்று ஆழ்வார் அழைக்கிறார்.
2.) பூர்வமீமாம்சையில் நெல்லின் மீதிருக்கும் உமியை நீக்குவதற்கு அதனை உரலால் இடுத்துத்தான் அரிசியை உண்டாக்கவேண்டும் என்பர். (புரோடாஶ கபாலேந துஷானுவபதி ! ) அப்படி பிரித்த அரிசியில் தான் புரோடாஶம் சமைத்து ஹோமம் செய்ய வேண்டும். இதற்கு நியதம் என்று பெயர். நகத்தால் கிள்ளியோ, ரைஸ்மில்லில் கொடுத்தோ பிரிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் தர்மம் கெடும் என்பர். இது ஜைமினி பகவான் அருளிய ஶாரீரக மீமாம்சையில் 4 ஆவது அத்தியாயத்தில் அங்கி-அங்க பாவனை அல்லது ஶேஷம்-ஶேஷி அல்லது ப்ரயோஜகம்=ப்ரயோஜ்யம் என்னும் தர்மங்களை விளக்குகையில் விரிவாகக் காணலாம்.
அவ்வாறே நம் சூக்ஷ்ம உடலில் ஒட்டியிருக்கும் கர்மங்களை (அழுக்குகளை) பக்திமார்கத்தில் சொன்ன க்ரமத்தில், வழியில், செயல்பாட்டு முறையால் தான் கழுவவேண்டுமே ஒழிய கைவல்ய மார்கத்தில் சொன்ன செய்லபாட்டு முறைகளால் அன்று. அப்படி கைவல்ய மார்கத்தில் சொன்ன செய்முறைகளால் மோக்ஷம் பெற்றால், அதன் பிறகு, அந்த ஆத்மா வைகுந்தத்திற்கு லாயக்கு படாது. எப்படி மெஷினில் அரைத்த மாவினை வைதீகர்கள் ஏற்பதில்லையோ அவ்வாறே, அந்த ஜீவனை திருமாலும் ஏற்க மாட்டார்.
மேலும் “ஜ்யோதிஷ்டோமேந யஜேத ஸ்வர்ககாம:”( சுவர்கம் செல்ல ஆசையுள்ளவன் ஜ்யோதிஷ்டோமம் என்னும் ஸோமயாகத்தினை செய்வானாக !) என்று பலனுக்கேற்ற மந்திரங்கள் அடங்கிய செயல்முறைகள் விதியாக கொடுக்கப்படுகிறது. இதேபோலத்தான்
ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநுஸ்மரந் -கீதை 3-13
பொருள்:- கைவல்யலோகம் செல்ல விருப்பமுள்ளவன் பரப்ரும்மத்தை சுட்டும் வாசகமான ஓம்காரத்தினை ஜபிக்கவேண்டும் என்றார் கண்ணன் எம்பெருமான்.
இதைத்தான் ஆழ்வார் அந்த ஓம்காரத்துடன் நம:, மற்றும் நாராயணாய என்னும் பதங்களை சேர்த்து ஜபித்தால் வைகுந்தம் பெறலாம் என்கிறார். ஏற்கனவே ஜபித்து பழக்கம் தானே. அத்துடன் இவ்விரண்டினையும் சேர்த்து கொண்டால் ஆகாதோ என்று , அவர்களை பார்த்து பச்சாதாபத்துடன்/கருணையுடன் உபதேசிக்கின்றார்.

-தொடரும்
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-7 -சரம பாகம்
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
பாகம்- 7-சரம பாகம்
வினாக்கள்:-
கைவல்யம் அடைந்தவன், அங்கிருந்து வைகுந்தம் செல்ல வேண்டி என்ன ஹோமத்தை செய்வான்?
எப்படி செய்வான்?, எங்கு, யாரை வைத்து, என்ன மந்திரம் சொல்லி செய்வான் ?
அதற்காக வேதத்தில் சொன்ன உத்பத்தி விதி யாது ? குணவிதி /விஶிஷ்ட விதி யாது ?
---------------------------------------------------------------------------/
”அதாதோ தர்ம ஜிக்ஞாஸா” அதாவது “வாருங்கள் தர்மத்தினை தெரிந்து கொள்ளலாம்-- (ஹி ஹி---இந்த சூத்ரத்தினை விவரித்தால் பாரதமாக விரியும்)” என்று வேதவ்யாசரின் சிஷ்யரான ஜைமினி பகவான் தொடங்குவதே ஶாரீரக ஶாஸ்திரம் என்னும் பூர்வமீமாம்சை அல்லது வேத ஆராய்ச்சி ஆகும். இது 16 அத்யாயங்களால் ஆனது. இதன் தொடர்ச்சி தான் வேதவ்யாசர் அருளிய 4 அத்யாயங்களால் ஆன ப்ரஹ்மசூத்திரமாகும். முதலில் தர்மம் பற்றி சிறிது ஆராய்வோம்.

“அக்நிஷ்டோமேந யஜேத ஸ்வர்ககாம :” அதாவது சுவர்க்கலோகம் செல்ல விரும்பும் த்ரைவர்ணிகன் அக்நிஷ்டோமம் என்னும் ஸோமயாகத்தினை செய்யக்கடவன் என்று வேதம் விதிக்கும் விதிவாக்கியத்தினை ஆராய்ச்சி செய்கிறார்.
நமது ஆத்மாவினை சுத்திகரிக்கும் செயல்களுக்கு ஸம்ஸ்காரங்கள் என்று பெயராகும். மொத்தம் 40 வகை ஸம்ஸ்காரங்கள் உண்டு. அதில் சோமயாகங்கள் மட்டும் 7 வகைகளாகும். அவையாவன 1.)அக்நிஷ்டோமம், 2.)அத்யக்நிஷ்டோமம், 3.)உக்த்யம், 4.)ஷோடஸி, 5.)வாஜபேயம், 6.)அதிராத்ரம், 7.)அப்தோர்யாமம் என்பனவாம்.
இவற்றுள் சுவர்க்கம் செல்லவேண்டி நம் சூக்ஷ்மஶரீரத்தில் சில அபூர்வங்களை(அத்ருஷ்டம்) உருவாக்க செய்யவேண்டிய “அக்நிஷ்டோமம்” என்பது முதல் வகை ஸோம யாகமாகும். இந்த ஸோமம் என்பது ஒருவகை தாவரம் ஆகும். கொடியாக வளரும் தாவர வகையாகும். இதனை வீட்டில் வளர்த்து அதனை அரைத்து சோமம் தயாரிக்கக் கூடாது. பின்னர் எப்படி சோமலதையினை சேகரிக்கவேண்டும் என்று
வேதமே சொல்கின்றது.

“அருணயா பிங்காக்ஷயா ஏகஹாயந்யா கவா ஸோமம் க்ரீணாதி” -சிவப்பு நிறமுள்ளதும் ஒரேவயதானதுமான காளை-எருதினை தானமாகக் கொடுத்து சோமலதை வாங்கவேண்டும். இது “கிர்(குஜராத்)” (அ) “சிகப்பு சிந்தி(பஞ்சாப்)” இன காளைகளை நினைவுபடுத்தும். இன்றைக்கு ஒரு காளை ஒன்றரை லக்ஷம் ரூபாய் ஆகும். “ஒரேயொரு காளைதான் கொடுக்கவேண்டும். அதுவும் ஆண்பால் ஜாதி! அதற்கு ஒருவயது(2 பற்கள்) மட்டுமே இருத்தல் வேண்டும் “ என்று உறுதிபடுத்த வ்யாகரண ஞானமும் மீமாம்சைக்கு இன்றியமையாத முன்னோடி எனத் தெரியவரும்.
ஸோமயாகம் செய்ய ரிக்வேதம் தெரிந்த ஹோதா என நால்வர், யஜுர்வேதம் தெரிந்த அத்வர்யு ஆதி நால்வர், சாமகானம் தெரிந்த உத்காதா முதலிய நால்வர் மற்றும் அனைத்தும் தெரிந்த ப்ரம்மா, யாஜி, உபயாஜி போன்றோர் 16 பேர் வேண்டும்.
இவற்றுள் வாஜபேய யக்ஞம் என்பது 5ஆம் வகை ஸோமயாகமாகும். இதனால் நாட்டில் மும்மாரி பொழிந்து வளம் செழிக்கும். வாஜம் என்றால் உணவு எனலாம். பேயம் என்றால் யக்ஞத்தில் மிஞ்சிய உணவினை திருமஞ்சனம் போல யஜமானன் தலையில் குளிப்பாட்டுவதாகும். இறுதியாக அவப்ருத ஸ்நாநம் செய்யப் போகும் யஜமானனுக்கு அரசனே குடை பிடிப்பான் என்பர். இவ்வாறாக ப்ராஹ்மணனின் சொத்து என்பது ஸோமயாகங்கள் செய்தே செலவாகிவிடும். அதற்காகவே தானம் வாங்குகின்றனர். ஆயுளில் ஒருமுறையேனும் 7 வித ஸோமயாகங்கள் செய்யவேண்டும் என்பது விதியாகும்.
“உத்பிதா யஜேத பஶுகாம:” அதாவது கால்நடைகளை விரும்பியவன் உத்பிதா ஹோமம் செய்வானாக என்றும் வேதம் விதிக்கின்றது. 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த யாகங்களையும் அவற்றுடன் சம்பந்தமுள்ள பொருள்கள், தேவதை பற்றி விநியோக விதி என்னும் வாக்கியங்கள் சொல்லும்.
மேலும் கார்ஹபத்யம் என்னும் அக்நிமேடை வட்டமாக இருக்கவேண்டும். இதில் தினமும் ஔபாஶநம் என்னும் ஸ்மார்த்த(ஸ்ம்ருதி) ஹோமமும், அக்நிஹோத்ரம் என்னும் ஶ்ரௌத(ஶ்ருதி) ஹோமமும் செய்யலாம். இவ்விரண்டு அக்நிகளும் அணையவே கூடாது.

ஆனால் இதற்கு தெற்கே அரைவட்ட வடிவில் தக்ஷிணாக்நி அமைக்கப்பட வேண்டும். இதில் பித்ரு ஹோமங்கள் செய்யலாம். தேவதைகளை உத்தேசித்து செய்யும் ஹோமங்களை வடக்கேயுள்ள சதுரவடிவில் இருக்கும் ஆஹவநீய குண்டத்தில் மட்டுமே செய்யலாம். இவ்வாறு குண்டங்கள் அமைப்பதன் தகவல்களை ஆபஸ்தம்பர் அருளிய கல்ப சூத்ரத்தினில் காணலாம். யாகம், தானம் போன்ற தர்மங்களை பாரததேசத்தில் தான் செய்யவேண்டும் என்றும் விதி உளது.
சரி சரி ! தொடங்கிய பிரச்னைக்கு வருவோம் !
கைவல்யம் என்றால் வெறும் ஆத்மா மட்டுமே இருக்கும். ஏது நல்லது என்று முடிவெடுக்க் புத்தியோ, சிந்திக்க மனமோ, மந்திரம் சொல்ல வாக்கோ, செயல்பட உடலோ கிட்டாது.
யாகங்கள், சாதனங்கள், இடம், புரோஹிதரும் இல்லை.

இந்த கேடுகெட்ட கைவல்யத்தில் இருந்து என்ன சாதனத்தால், எந்த தர்மத்தினை அநுஷ்டித்து வைகுந்தம் செல்வான் ?
மீமாம்சையில் ஆர்த்தீ பாவனை, ஶாப்தீ பாவனை என்றெல்லாம் சொல்வார்கள். வைகுந்தம் செல்ல உபயோகமான பாவனை என்னும் சாதனம் எது ? இதிகர்தவ்யதா என்னும் அதனை அநுஷ்டிக்கும் முறை யாது ? அர்த்தவாதம் என்றும் ஒரு சொல் உண்டு. அதாவது
வாயவ்யம் ஶ்வேதம் ஆலபேத பூதிகாம: | வாயுர் வை க்ஷேபிஷ்டா தேவதா ||
பொருள்:- செல்வத்தை விரும்புமவன் வாயு பகவானுக்கு வெள்ளை நிற ஆட்டினை அவியாக கொடுக்க வேண்டும். ஏனெனில் வாயு அதி வேகமாக செல்லக்கூடிய/பலனளிக்கக் கூடிய தேவதையாவார். இங்கு வேகமாக பலன் தருபவர் என்று விஶேஷித்து பாராட்டி சொன்னது தான் அர்த்தவாதம் என்பார்கள்.

அவ்வாறே கைவல்யத்தை விட வைகுந்தமே சிறந்தது என்று, அந்த ஜீவனுக்கு யார் சொல்வார்கள் ? எவரும் இல்லை.
மேலும் சாந்தோக்ய உபநிஷதத்தில் நாரத-ஸனத்குமார ஸம்வாதமாக நடப்பது பூமா வித்தை ஆகும். எதனை அநுபவித்த/அறிந்த பின்னர் வேறு எதனையும் அனுபவிக்கும்/அறியும் எண்ணம் வராதோ , அதுவே பூமா ஆகும். மேலும் எதனை அநுபவித்த/அறிந்த பின்னர், அதைவிட வேறு எதனையும் அனுபவிக்கும்/அறியும் எண்ணம் வந்தால் , அதுவே அல்பம் ஆகும். ஆகவே

வாயுவுடன் செல்லும் ஆத்மாவே பூமா என்று முடிகிறது. இப்பொழுது கைவல்யத்தில் இருக்கும் ஜீவன் ஏற்கனவே பூமா என்னும் தன் ஜீவாத்மாவினை அனுபவிக்கின்றான். அந்த ஜீவனுக்கும் பரமனுக்கு இருக்கும் எட்டு குணங்களான 1)அபஹதபாப்மத்வம், 2)விஜரத்வம், 3)விம்ருத்யுத்வம், 4) விஶோகத்வம் ,5)அபிபாஸத்வம், 6)விஜிகத்ஸத்வம், 7)ஸத்யகாமத்வம், 8) ஸத்யஸங்கல்பத்வம் இருக்கும். எனவே தன்னை விடுத்து, திருமாலை எப்படி அடைவான். தன்னை விட திருமாலே பூமா என்று அப்படி அறிவான் ? வழியே இல்லையே !! நாம் தினமும் தமஸ்ஸுடன் கூடிய என்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இறைவனுடன் ஒட்டிக்கொண்டு, இன்பமயமாய் ஏதும் அறியாது தூங்குகின்றோம். ஆனால் கைல்வயத்தில் இவ்வாறே சுஷூப்தி என்னும் நிலையில் பரமனுடன் ஒட்டிக்கொண்டு , தன்னை மட்டுமே அநுபவித்தபடியே காலமுள்ளவரையில் கிடக்கவேண்டியது தான். அடியார்களுக்கு கைங்கர்யமும் இல்லை. திருமாலுக்கு மங்களாஶாசனமும் இல்லை.
ஜீவாத்மாவை (கைவல்யம்) விட பரமாத்மா உயர்ந்தவன் என்று (வாயுர்வை க்ஷேபிஷ்டா தேவதா என்பது போல) விதிக்கும் உத்பத்தி விதி(அறிவிப்பு) / குண விதி (சாதனம்) / விஶிஷ்ட விதி (பலன்) அல்லது அர்த்தவாதம் (ஓப்புநோக்கு) கைவல்ய லோகத்தில் இல்லையே .
ஒருவேளை “சித்த-தர்மமான திருமால் கருணை மிக்கவர் ஆவார். ஆகவே அவராகவே மோக்ஷம் தருவார்” என்றால் ஸர்வமுக்தி ப்ரசங்கம் எனும் தோஷம் வரும்.
“போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே, திருவாய்மொழி-4-10-6” .

பலசொல்லி என்ன ? வைகுந்தம் செல்ல ஆழ்வார் “சிற்றவேண்டா சிந்திப்பே அமையும்” என்கிறார். அந்த அவாவினை
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவிப்பது எல்லாம்
கைவல்ய லோகத்தில் கிடையாது. இப்பூமியில் தானே.

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அத னில் பெரிய பரநன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே – திருவாய்மொழி-10-10-10

ஆழ்வாருக்கு தன்மீது அவாவினை பிறப்பித்தவன் பெருமாள் தான்.
அந்த பேரமர் காதலை கடல்புரைய வளர்த்தவனும் அவனே.
இறுதியாக அந்த அவா என்னும் ஆசையை அசித் என்னும் ப்ரக்ருதியை விடவும், சித் என்னும் ஜீவனை விடவும், ஈஶ்வரன் என்னும் தன்னை விடவும் பெரிதாக வளர்த்துத் தான் வீடுபேறு நல்கினான்.

இது நடந்தது கைவல்யத்தில் இல்லை. அப்படி கைவல்யத்திலிருந்து வைகுந்தம் போகலாம் என்றால் ? லீலா விபூதி எதற்கு ?
நம் அனைவரையும் கஷ்டமே கொடுக்காமல் கைவல்யதிலேயே ஸ்ருஷ்டித்து, தன் கருணையினால் நேரே வைகுந்தம் அனுப்பலாமே ?

வைணவனுக்கு கைவல்யம் "இந்த உயிர்போகும் ஆபத்து" அல்லது விபத்து என்று கருதியதால் தானே, மற்றுள்ள ஆழ்வார்கள் ஆர்வத்தளவு தானன்றி பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் "வரம்பொழி வந்து ஒல்லை கூடுமினோ" என்று உபதேசித்தார். "ஒல்லை" - என்னும் சொல் பதற்றம்/ அவசரத்தினை குறிப்பது ஆகும். ஒரு குடிசைப் பகுதியில் தீவிபத்து (அ) வெடிகுண்டு என தெரிந்தால்,-
அய்யோ ! ஓடிவாருங்கள் ! என்றோ "பாம் வைத்திருக்கிறார்கள் ! ஓடுங்கள்" என்றோ கூப்பாடு போடுவது போன்ற சொல் இதுதான்.

ஆக ! அடியேன்- பொடியேன்- குடியேனுடைய வாதத்தினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இதுவரை நடுநிலையாக எழுதினேன்.
யாரையாவது மனம் வருந்தும் படி எழுதியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

FEEDBACKS ARE WELCOME.
*******************************************/
*******************************************/
அடுத்த பிராது –“பெரிய பிராட்டியார் பரமாத்மாவா” என்னும் கருத்து பற்றிய அடியேன் வாதங்களை அடுத்த பகுதியாக தொடர்வேன்.
*******************************************/
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
********************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
********************************************/
பாகம்- 8-
***********************************************************************/
கைவல்யத்தினை பரமாசார்யரான ஆளவந்தார் தம் ஸ்தோத்ரரத்னத்தில் இகழ்ந்தது.

வைட்ணவன் விபசாரத்திற்கு துணை போகலாமா ?
வ்யபிசாரம் என்றால் என்ன ? ஸாஹசர்ய நியமம் என்றால் என்ன ?
அநைகாந்திகம் என்றால் என்ன ?
ஏகாந்தி , பரமைகாந்தி என்பவர் யாவர் ?
பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் என்பவை யாவை ?

ஶ்ரீவசனபூஷணத்தில் ஶ்ரீபிள்ளைலோகாசார்யர் , ஶ்ரீமத் ராமாயணத்தாலே “சிறையிருந்தவள் ஏற்றம்” சொல்லப்பட்டது என்றார். வால்மீகி பகவானும் “ஸீதாயா: சரிதம் மஹத்” என்றே தானருளிய இதிஹாசத்திற்கு பாலகாண்டம் நான்காம் ஸர்கத்தில் திருநாமம் சூட்டினார். “தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள்” என்றார் ஆழ்வார்.
மேலும் நாரதர் சங்க்ஷேப ராமாயணமாம் முதல் சர்கத்தில் பெரியபிராட்டி என்னும் கதாபாத்திரத்தினை அறிமுகப்படுத்துகையில் “நாரீணாம் உத்தமா வதூ:” என்கிறார்.
ராமஸ்ய தயிதா பார்யா “நித்யம் ப்ராணஸமா” ஹிதா |
ஜநகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா || 1-1-26
ஸர்வலக்ஷண சம்பந்நா நாரீணாம் உத்தமா வதூ |
ஸீதா அபி “அநுகதா” ராமம் ஶஶிநம் ரோஹிணீ யதா || -1-1-27

இங்கே “நித்யம் ப்ராணஸமா” என்பதையும் “நித்யம் ஹிதா” என்றவாரும் பயிலும் சொற்றொடர்களை உங்கள் மனதினில் நன்றாக அடிக்கோடு இட்டுக் கொள்ளுங்கள். மேலும் அவற்றுடன் “அநுகதா” என்னும் சொல்லையும் பசுமரத்தாணி போல நெஞ்சில் /நினைவில் இருத்துங்கள்.
அதாவது பெரியபிராட்டி என்னும் கதாபாத்திரம் ஶ்ரீராமரில்லாமல் இருக்கவே மாட்டாள் என்பது அப்பாத்திரத்தின் தேற்றம்/ விளக்கம் ஆகும். “அநுகதா” என்னும் சொல்லின் உண்மையான பொருளினை அறிய தர்க்கத்தின் பக்கம் செல்வோம்.
சரதி / கதவான் என்றால் செல்பவன்/நடப்பவன் என்று பொருளாகும்.
அநுசரதி / அனுகதவதீ என்றால் பின்னாலேயே செல்பவள்/நடப்பவள் என்று பொருள்தரும். அதாவது கணவன் சொற்படி (திருவுள்ளப்படி) நடப்பவள், அகலகில்லேன் இறைப்பொழுதும் (நொடிப்பொழுதும்) என்று பொருள்.

இதனை ஸஹ சரதி அல்லது அபி சரதி என்னலாம். இது கூடவே செல்லும் நிலை.
இதற்கு எதிர்தட்டான நிலையினை குறிக்க அதனுடன் “வி” சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வி+அபி+சரதி = வ்+ய்+அபி+சரதி = வ்யபிசரதி [வ்யாகரணத்தில் வி முன்னர் அ வந்தால் இகாரம் தொலைந்து யகாரம் முளைக்கும்]
வ்யபிசரதி என்றால் தன்னிஷ்டத்திற்கு நடப்பவன்/ள் என்று பொருள் தரும். இவ்வகை ஆசாரத்தினை வ்யபிசாரம்=விபசாரம்(திரிபு) என்பர்.
எவ்வாறெல்லாம் இல்லாமல் பிராட்டிக்கு “திருவேங்கடமுடையான் திருமார்பினில் அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை” என்றார் ஆழ்வார். “உறைமார்பு” என்பதன் இலக்கணக்குறிப்பு வினைத்தொகை என்பர். “முன்னர் உறைந்தாள்”; “இப்பொழுதும் உறைகின்றாள்”; “எதிர்காலத்திலும் உறைவாள்” என்பது பற்றியே உறைமார்பா என்று பிராட்டியின் DEFINITION செய்தார் ஆழ்வார்.
அமலன், விமலன், நின்மலன் என்று திருப்பாணாழ்வார் திரும்ப திரும்ப திரும்ப சொன்னது போல அப்பழுக்கற்ற பத்தரை மாற்றுத் தங்கம் என்பதே “இறையும் அகலாதவள்” என்னும் சொற்றொடராகும். இதுவே நாரதபகவான் சொன்ன “அனுகதா” என்ற சொல்லின் விளக்கமாகும்.

சரி மீண்டும் அந்த வ்யபிசார பதத்திற்கே வருவோம். இதனை அனைகாந்திகம் என்றும் சொல்லலாம். ஏக+அந்திகம் = ஒருவனையே நம்பியிருக்கும் இருப்பு. வைட்ணவர்களை ஏகாந்தி, பரமைகாந்தி என்பர். அவ்விருப்பினை “மறந்தும் புறந்தொழாத மாண்பு” என்பர்.
பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு.
முதல் திருவந்தாதி-பாசுரம் -67 என்பது பொய்கையாழ்வார் திருவாக்காகும்.

அதற்கு எதிர்பதம் கொள்ள அதன் முன்னர் அன் (அல்லது) அகாரம் சேர்க்கலாம்.
அன்+ஏகாந்திகம் = அநேகாந்திகம் [ வ்யாகரணத்தில் தத்திதாந்த ப்ரயோகம் வந்தால் அனேகாந்தம் என்னும் ஆசாரம் அனைகான்திகம் என்றாகும்]
வைட்ணவர்களாகிய நாம் ஏகாந்திகள் ஆவோம். பிற மதத்தார் அனைகாந்திகள் ஆவர். அந்திகம் என்பதற்கு இருப்பு, சாதனம், இறுதிப்பலன் என்னலாம். நமக்கு நாராயணே ஸித்த தர்மமாகவும், , (அடையச் செய்யும் வழி ஆவான்).
கஷ்டங்களைப் போக்குபவன் அவன் ஒருவனே என்றிருத்தல். இஷ்டங்களை கொடுப்பவன் அவன் ஒருவனே என்றிருத்தல். இறுதியான இலக்கும் அவன் ஒருவனே என்றிருத்தல் நமது இருப்பாகும்.

-------------------------------------------------------------------------/
இதற்கு மேலும் ஆழமான விளக்கம் பெற ந்யாயத்திற்குள் புகுவோம். [இரண்டு மூன்று முறை நிறுத்தி நிதானமாகப் படித்தால் விளங்கும்.]
தர்க்க ஶாஸ்திரத்தில் ப்ரமாண (அறிவைக் கொடுக்கும் சாதனம்) அத்யாயத்தில் இரண்டாவதாக வருவது “அநுமாநம்” ஆகும். தூரத்தில் மலையின் மீது புகை எழுந்தால், அங்கு நெருப்பு இருக்கின்றது என்று அறிவது அனுமான அறிவாகும். புகையினையும் நெருப்பினையும் சமயலறையில் அல்லது தளிகை செய்யும் இடங்களில் பலமுறை கண்டாலன்றி இப்படி அனுமானம் சம்பவிக்காது. “புகையானது நெருப்பின்றி உருவாகாது / இருக்க முடியாது” என்பதனை ஸாஹசர்ய நியமம் (ஶ்ரீராமரில்லாத இடத்தில் லக்ஷ்மணர் இல்லை) என்பர்.
இதனை வ்யாப்தி என்றும் சொல்லலாம். இங்கே வ்யாபகம் நெருப்பு ஆகும். வ்யாப்யம் புகை ஆகும். நெருப்பினை ஹேது (காரணம்/சாதனம்) என்றும் புகையினை லிங்கம் (கார்யம்/சாத்யம்) என்றும் மலையினை பக்ஷம் என்றும் கலைச்சொற்களால் சுட்டுவார்கள்.

எங்கெல்லாம் புகை உண்டோ அங்கெல்லாம் நெருப்பு வேண்டும் என்று சொல்வது அந்வய-வ்யாப்தி => நேர்வழி அறிவு ஆகும். எங்கெல்லாம் நெருப்பு இல்லையோ அங்கெல்லாம் புகை இல்லை என்று சொல்வது வ்யதிரேக வ்யாப்தி=> எதிர்மறை வழி அறிவு ஆகும்.
உறுதியாக நெருப்பு(ஹேது) இருக்கும் இடங்களை ஸபக்ஷம் என்பர். அதாவது சமையலறை என்பது ஸபக்ஷமாகும். அங்கே நிச்சயமாக நெருப்பு இருக்க வேண்டுமல்லவா ! இப்படிப்பட்ட இருப்பினை “ஸாஹசர்ய நியமம்” என்பர். அதாவது சமயலறையும் நெருப்பும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் போல என்க.
சந்தேகத்துடன் நெருப்பு (ஹேது) இருக்கும் இடத்தினை பக்ஷம் என்பர். அதாவது மலை இங்கே பக்ஷம் எனப்படும். முடிவாக
நெருப்பு இருக்கவே வாய்ப்பில்லாத இடத்தினை விபக்ஷம் என்பர். ஆக்சிஜனே இல்லாத வெற்றிடத்தில் நெருப்பு இருக்க வாய்ப்பே கிடையாதே ! அல்லது மீத்தேன் போன்ற ஹைட்ரொகார்பன் இல்லாத் நீர்நிலை கூட விபக்ஷம் தான். சாதாரணமாக ஏரியிலும், குளத்திலும் நெருப்பு இருக்காது. அவைகூட விபக்ஷங்கள் தான்.

ஒரு சாத்யம்/கார்யம் அதற்கு சாதனமேயில்லாத (காரணமேயில்லாத) இடத்தில் இருப்பதாகச் வாதம் சொன்னால் அந்த வாதத்தில் காணும் தோஷத்திற்கு வ்யபிசாரம் (அ) அனைகாந்திகம் என்பர்.
ஏரியில் நெருப்பு (அ) வெற்றிடத்தில் நெருப்பு இருக்கும் என்று வாதம் சொன்னால் அதற்கு வ்யபிசார தோஷம் என்பர். இது ஒரு நிக்ரஹஸ்தானம் (வாதத்தில் தோற்கும் நிலை) ஆகும்.
பக்ஷத்திலும், ஸபக்ஷத்திலும் சாத்யம் இருக்கவேண்டும். விபக்ஷத்தில் சாத்யம் இருக்கவே கூடாது. அப்படி விபக்ஷத்தில் சாத்யம் இருப்பதாக நாம் சொல்லும் வாதம், நம்மை நிக்ரஹஸ்தானத்தில் தள்ளும்.
----------------------/
ததஹம் த்வத்வ்ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தநீயவான் ந ச
விதிநிமிதம் ஏததன்வயம்
பகவந் பாலய மாஸ்ம ஜீஹப
ஸ்தோத்ரரத்நம்-51
பொருள்:- எம்பெருமானே ! ஆகையினாலே அடியேன் உன்னைத் தவிர வேறொருவனை நாதனாக உடையேனல்லேன். நீயும் என்னைப் போல உண்மையான வேறொருவனை அடையமாட்டாய். அபூர்வத்தாலே வாய்த்த இந்த சம்பத்தை காப்பாற்றிக்கொள். இழந்து விடாதே !

ந தேஹம் ந ப்ராணாந் ந ச சுகமஶேஷாபிலக்ஷிதம்
நசாத்மாநம் நாந்யத் பிமபி தவ ஶேஷ்த்வ விபவாத்
பஹிர்பூதம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா
விநாசம் தத் ஸத்யம் மதுமதன விக்ஞாபநமிதம்
ஸ்தோத்ரரத்நம் -57

பொருள்:-“ திருமாலே ! உனக்கு சேஷப்பட்டிருக்கை என்னும் செல்வத்திற்கு ஒத்துப்போகும் உடலில் தான் எனக்கு விருப்பம் உண்டு. உனக்கு சேஷப்படாத உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்கமாட்டேன். அப்படியே உனக்கு சேஷப்படாத ப்ராணனையும் பொறுக்கமாட்டேன். இவ்வாறே அனைவரும் விரும்பும் சுகத்தையும் சகிக்க மாட்டேன். (இங்கே ஐஶ்வர்யத்தினை இகழ்கின்றார்). ஆத்மாவையும் சகிக்கமாட்டேன். (இங்கே கைவல்யத்தினை இகழ்கின்றார்).
சேஷத்வமில்லாத கீழ்ச்சொன்ன தேஹாதிகளெல்லாம் உருமாய்ந்து போகட்டும். மதுவைக் கொன்ற பெருமானே, இங்ஙனே விண்ணப்பம் செய்த இது சத்தியம் ஆகும்” என்றார் பரமாசார்யர்.

“ஒருவேளை உனக்கு கைங்கர்யம் செய்யலாயக்கற்ற கைவல்ய லோகத்தில் கிடப்பதை விட, அந்த ஆத்மாவானது ஒழிந்துபோதலே மேலானது” என்றே விண்ணப்பம் செய்வதைக் காணலாம்.
அதாவது ஒரு குலமகளானவள், என்ன நேர்ந்தாலும், இறுதிவரையில், தன்னைக் கைப்பிடித்த மணாளனுடனே தான் வாழ்வாள். அவன் கைவிட்டால் வாழவே மாட்டாள். அவ்வாறே “என்னை கைவல்யத்தில் தள்ளுவதை விட, அந்த ஆத்மாவையே அழித்து விடு. இது சத்தியம்” என்கிறார் பரமாசார்யர்.
இது ஶ்ரீகுலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழியில் 5 ஆம் பதிகத்தில்
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண்தோய் மதிள்புடை சூழ் விற்றுவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாய் ஆகிலும் உன் குரைகழலே கூறுவனே

என்னும் பாசுரம் நினைவுக்கு வரலாம்.
மேலும் மீமாம்சையில் நியம விதி என்றுண்டு. ஒரு காரியம் சாதிக்க பலவழிகள்(சாதனங்கள்) இருக்கலாம். அவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்க ஶாஸ்திரம் சொன்னவழியில் செய்யத்தான் வேண்டும். புரோடாஶம் (புர=தேவதை+அதஶம்=முன்னர் காணிக்கை தருதல்) தயாரிக்க அரிசி வேண்டும். அதற்கு நெல்லின் உமியை நீக்க அதனை உரலில் தான் இடிக்கவேண்டுமே தவிர நகத்தால் பிய்த்து அரிசியினை பிரிப்பதோ அல்லது ரைஸ்மிஷினில் கொடுத்து அரிசியாக்குவதோ கூடாது.
இதை “நியதமும் அத்தாணிச் சேவகமும்” என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் கூறுகிறார். பெரியபிராட்டியாரை ஹனுமான் தன் முதுகில் ஏறிக் கொண்டால் லங்கையைத் தாண்டி பெருமாளிடம் சேர்க்கிறேன் என்று சொன்னபொழுது, பிராட்டி இந்த நியம விதியைத்தான் சுட்டினாள். பலனும் ஶ்ரீராமர் தான். வழியும் அவரே என்றாள். அவள் ஏகாந்திக தர்மத்தினை, ஸாஹசர்ய நியமத்தை கடைபிடித்தாள். இவளை நன்கறிந்த பெருமாள் இவள் நடத்தையில் சந்தேகம் கொண்டார் என்பது ஏதும் அறியாதவன் பேச்சன்றோ !
மேலும் ராவணனைப் பார்த்து
அஸந்தேசாத் து ராமஸ்ய தபஸஸ் சாமபாலநாத் |
ந த்வாம் குர்மி தஶக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ தேஜஸா ||-
ஸுந்தரகாண்டம்-22-20
உன்னை என் சொல்லால் சுடமுடியும். அது என் தலைவனின் வில்லுக்கு மாசென்று வீசினேன் என்றாளே.
ஆகவே கைவல்யம் செல்வது என்பது பூர்வாசார்யர்கள் மற்றும் ஆழ்வார்கள் பக்ஷத்தில் வ்யபிசாரம் (அ) அனைகாந்திகம் போலவாம். அங்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அதனை/அச்செயலை ஆதரிப்பது விபசாரத்தை / அனைகாந்திக தோஷத்தினை ஆதரிப்பது மாதிரி ஆகிவிடும். அது உங்கள் தோல்வியை நீங்களே ஒப்புக்கொண்ட மாதிரி தானே.
சேம்சைடு கோல் என்று கால்பந்து விளையாட்டில் சொல்வார்கள். வடமொழியில் “லகுட உஷ்ட்ர ந்யாயம்” என்பர். அதாவது ஒட்டகத்தின் மீது குச்சியை சுமந்து செல்வார்கள். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தால், அது சுமக்கும் குச்சியாலேயே அடிப்பார்கள்.

எனவே கைவல்யம் சென்றவன் வைகுந்தம் செல்வான் என்ற உபந்யாசம் முழுத் தவறு, தோஷமுள்ளது, தோல்வியில் அதுவே தள்ளும் என்று கூறி அமைகிறேன்.
இனி அடுத்த பிராதுக்கு செல்லலாம்.
ACTUALLY இந்த தர்க்கம் அடுத்த பிராது சம்பந்தமான-விசாரணையில் தரவேண்டியது. இருமுறை படித்தால் உங்களுக்கும் புரியும் என்று வேண்டுமென்றே இங்குப் புகுத்தினேன்.
அடுத்த பிராது –“பெரிய பிராட்டியார் பரமாத்மாவா” என்னும் கருத்து பற்றிய அடியேன் வாதங்களை அடுத்த பகுதியாக தொடர்வேன்.
*******************************************/
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
*******************************************/
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஶ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
*******************************************/
பாகம்-1
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329760264230493
பாகம்-2
https://www.facebook.com/subhash.kobla.7/posts/329889160884270
பாகம் -3
https://www.facebook.com/subhash.kobla.7/posts/330158187524034
பாகம்-4
https://www.facebook.com/subhash.kobla.7/posts/332042990668887
பாகம்-5
https://www.facebook.com/subhash.kobla.7/posts/336707523535767
பாகம்-6
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356845298188656
பாகம்-7
https://www.facebook.com/subhash.kobla.7/posts/356956241510895
********************************************/
இரண்டாம் உபன்யாசம் - முன்னுரை
பெரியபிராட்டியார் பரமாத்மாவா ?
****************************************************/
இதனை SHARE செய்வதால் உங்களுக்கு ஒரு நஷ்டமும் வாராது. படிக்கும் பலருக்கு உண்மை புரியட்டுமே

க்ஷோதீயாநபி துஷ்டபுத்திரபி
நிஸ்ஸ்நேஹோபி நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம்
ந ச பிபேமி அக்ஞ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸா து ந தாவதா
ந ஹி ஶுநா லீடாபி பாகீரதீ
துஷ்யேத் ஶ்வா அபி ந லஜ்ஜதே
ந ச பிபேதி ஆர்திஸ்து ஸாம்யேத் ஶுந : ||
நிஸ்ஸ்நேஹோபி நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம்
ந ச பிபேமி அக்ஞ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸா து ந தாவதா
ந ஹி ஶுநா லீடாபி பாகீரதீ
துஷ்யேத் ஶ்வா அபி ந லஜ்ஜதே
ந ச பிபேதி ஆர்திஸ்து ஸாம்யேத் ஶுந : ||
பொருள்:- ஹே ரங்கநாச்சியாரே ! எதுவும் அறியாத நான் நீச புத்தியுடையவன். தீய புத்திகொண்டவன். அன்பும் இல்லாதவன். உன்னைக் குறித்து எந்த விருப்பமும் இல்லாதவன். ஆயினும் உன்னுடைய புகழை எனது வாய்கொண்டு துதிப்பதற்கு அச்சம் கொள்ளவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. உன்னுடைய புகழானது, என்னால் கூறப்பட்டால் சிறிதும் குறைந்து விடாது. தூய கங்கைநீரை நாயானது நக்குவதற்கு வெட்கமோ, பயமோ கொள்ளுவதில்லை. இதன் மூலை நாயின் தாகம் தான் தீருமே அல்லாது கங்கையின் தூய்மை கெடுவதில்லையே .
கூரேஶர் எனக்காக அன்றோ பிறந்தார். (இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் என்பது போலவாம்). இந்த ஶ்ரீஸ்தவத்தில் 5 ஆம் ஸ்லோகத்தால் என்னை நாய் என்றும், நீச/நீச புத்தி கொண்டவன், பக்தியில்லாதவன் என்றும் சொல்லி, கட்டுரையினை தொடங்குமுன் நைச்சியபாவம் கொள்கிறேன். அந்த நாய் தாகத்தால் கங்கையில் இழிந்து நீரினை அருந்துவது போல அடியேனும் அவள் பெருமையினை பேசுகிறேன். இதனால் அவள் மேன்மைக்கு ஒரு குறையும் வாராதன்றோ.
--------------------------------------/
“ஒருவனின் வெற்றிக்கு பின்னர் ஒரு பெண் உண்டு” என்பர். ஆனால் அடியேனுக்கோ வாழ்க்கையே பெண்களால் தான் ஓடுகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?

விஷ்ணுபுராணத்தில் பராஶர பகவான், ஒவ்வொரு பெண்பால் உயிரும் ஶ்ரீமஹாலக்ஷ்மி அம்ஶம் என்றார். ஆகவே அடியேனது மாதாமஹி (தாய்க்கு அன்னை), பெற்ற தாயும், மனைவியும், மகள்களும், உடன்பிறவாத தமக்கையர் சிலரும், பெரியம்மாவும், ஆசிரியைகளும் என அனைவருடைய நல்லாசிகளுடன் வாழ்கிறேன்.
வாசகர்களே ! உங்களைப் போலவே/உங்களை விட அடியேனுக்கும் பிராட்டி சம்பந்தம் நிறையவே உண்டு. அடியேனை தடுத்தாட் கொள்ளவே திருமலை அலர்மேல்மங்கையும், அழகர்மலை சுந்தரவல்லியும் இரு பெண்குழவிகளாகப் பிறந்தனர். ஆணாதிக்க அஹங்காரமும் தொலைந்தது. அடியேனுடைய தாயார் Smartness என்னும் சாமர்த்யம் அற்றவள். “ஓடும் புள்ளேறி சூடும் தன் துழாய்” என்னும்படி ஆர்ஜவமே (நேர்மை) மிக்கவர். பிற உயிர்களிடம் அன்பு கொண்டவள். “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம் பவதி துகித:” என்னும் ராமாயண ஸ்லோகத்தின்படி பிறர்படும் துன்பத்தினை தனதாகவே கொண்டவர். இப்படியாக அவளிடம் காணப்பட்ட சில சீலங்களும், குணங்களும் அடியேனுக்கும் ப்ரசாதமாக கிடைத்தது. ஆகவே அவளையும் பெரியபிராட்டியாகவே கொண்டேன்.
அடியேனுடைய குழவிப்பருவம் முதல் ஶ்ரீமத்ராமாயண கதைகளை சொன்னவர் மாதாமஹி ஆவார். அவளும் பிராட்டி ரூபம் தான். 12 ஆம் வகுப்பில் வேதியியல் சொல்லித் தர தமக்கை ரூபத்தில் வந்தாள். பின்னர் மருத்துவம் படிக்க மதிப்பெண் போதாமையாலும், பொறியியல் அடியேனுக்கு கசந்ததாலும் கலைக்கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தேன். சென்னைக்கு அனுப்பினால் பையன் விளங்காமல் போவான் என்று தமக்கை தடுத்து விட்டாள்.
பொறியியல் நுழைவு தேர்வினை எழுதவேயில்லை. 10 ஆம் வகுப்பில் 95% மதிப்பெண் இருக்கவே DIPLOMA IN CHEMICAL TECHNOLOGY யில் சேர அழைப்பு வந்தது. விலங்கியல் ஆசிரியை தகப்பானாரைத் தடுத்து “டாக்டர் மகன் டிப்ளமோ படிப்பதா” என்று பொறியியல் கல்லூரியில் (Management Quota) வில் சேர்த்தார். பிடிக்காத கல்வியில் ஆர்வமற்று முழுதாக வைணவ சமயத்தில் குதித்தேன். பல திவ்யதேசங்கள் சென்று சேவிக்கலானேன். பெரியம்மா வடிவில் பிராட்டி பிடிப்பினை கொடுத்து டிகிரி பாஸ் செய்ய வைத்தாள்.
பின்னர் வேலைக்கு அலைந்தேன். Y2K, H1B visa உச்சகட்டத்தில் இருந்த காலம். 50 இன்டர்வியூ சென்றும் வேலை கிட்டவில்லை. பெரியம்மா சிபாரிசில் ஒரு கன்சல்டேஷன் கம்பனிக்கு சென்றேன். அங்கு மேலாளர் –“உனக்கு SKILLS எக்கச்சக்கமாக உண்டு. PRESENTATION தெரியவில்லை என்று கற்றுக் கொடுத்தார். அடுத்த நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அமேரிக்கா சென்றேன்.
இப்படியாக பெரியபிராட்டியார் அடியேனை வழிநடத்துகின்றார். இருந்தும் அடியேனுக்கு நல்லபுத்தி வருவதில்லை. “சுமார் மூஞ்சி குமார்” என்றே காலம் தள்ளுகிறேன். இதில் சில வாசகர்கள் பெரியஜீயர்-மணவாள மாமுனிகள் பற்றி எழுத சொன்னார்கள். மிக மிக மிக அதிகமாக உணர்ச்சிவசப்படும் அடியேனால் சுத்தஸத்வமே வடிவெடுத்த பெரிய ஜீயரை பற்றி நினைக்கவும் தகுதியுண்டோ ? போயும் போயும் அடியேன் “ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம்” தனியன் சேவிப்பது என்பது காலக்கொடுமை. இருந்தாலும் பெரிய ஜீயரானவர் பெரிய மனது வைத்து அடியேனை விட்டுவைத்தார். “என்னைப் போல் அயோக்கியன் உண்டோ ! உம்மைப்போல் அருளாளர் உண்டோ” என்று வெறும் வாக்கினால் ருஜுவில்லாமல் அவரையும் ஏமாற்றுகிறேன்.
சரி ! சரி ! தொடங்கிய விஷயத்திற்கு வருவோம். இப்படியெல்லாம் அடியேனை வாழ்விக்கும் பெரியபிராட்டியை –“அவளும் பரமாத்மா” என்று வைட்ணவத்தில் ஒரு சாரார் அறியாமையினால் வாதிடுகின்றனர்.
சூரியனுக்கு ப்ரபை போல ஶ்ரீராமருக்கு பிராட்டி என்பது அவளைப்பற்றிய லக்ஷணம் ஆகும். அவளை பரமாத்மா என்னும் வாதம் அனைகாந்திகம் அல்லது வ்யபிசாரம் என்னும் தோஷத்தில் முடியும். அது எப்படி எனபதனை பின்வரும் கட்டுரைகளில் விளக்குவேன்.
பரமாத்மா என்றால் ஏதோ குச்சி மிட்டாய் சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டனர் பலர். சிவனும் பரமாத்மா, பார்வதியும் பரமாத்மா, முருகனும் பரமாத்மா, பில்ளையாரும் பரமாத்மா என்பது சைவர்கள் காட்டும் வேடிக்கை. இதில் வைட்ணவர்களில் ஒரு குழுவினர் சேர்ந்து கொண்டு மஹாலக்ஷ்மியும் பரமாத்மா என்று கோருவது வேடிக்கையானது.
ஆகவே அவளுக்கு ஏற்பட்ட இந்த தோஷத்தினை, பழியினை அவள் ப்ரஸாதத்தில் வாழும் அடியேன், அவள் அருளால், போக்குவேன். உத்தேஶம், லக்ஷணம், பரீக்ஷை, ஜாதி, சாமான்யம் என்று தர்க்கத்தின் சில பாகங்கள் கடினமாகவே இருப்பினும் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் வாசித்தால், பெருத்த நன்மையுண்டு.
கூரேஶரை நடமாடும் பாணினி என்பர். உடையவரோ தர்க்கத்தில் சிங்கம் (பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப) என்பர். அவரடியார்களாகிய நாமும் வ்யாகரண, தர்க்க, மீமாம்சைகளில் புலியாக வேண்டாம். Atleast ஒரு எலியாக இருந்தாவது 1000 வருட மஹோத்சவம் கடந்த ஆசார்யரின் மானம் காப்போம் என்று சூளுரைக்கலாமே !
****************************************************/
ஶ்ரீபெரியபிராட்டியார் சமேத பெரியபெருமாள் திருவடிகளே சரணம்
இளையவல்லி, ஜனகவல்லி சமேத உறங்காவில்லி திருவடிகளே சரணம்
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
****************************************************/
****************************************************/
ஶ்ரீபெரியபிராட்டியார் சமேத பெரியபெருமாள் திருவடிகளே சரணம்
இளையவல்லி, ஜனகவல்லி சமேத உறங்காவில்லி திருவடிகளே சரணம்
ஶ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்
****************************************************/
சிறப்பு இன்னும் எழுத அரங்கனை ப்ரார்த்திக்கின்றேன்
ReplyDelete