Posts

வடகலை vs தென்கலை

*******************************************/ ***** வடகலை vs தென்கலை ***** ********************************************/ (குறிப்பு: இதை SHARE செய்வதால் உங்கள் பணம் ஒன்றும் கரைந்து விடாது. உங்கள் கிரீடமும் இறங்கிவிடாது) பாகம்-1. முன்னுரை அடியேன் வடகலைப் பிரிவினைச் சேர்ந்த ஸ்ரீவைட்ணவ குடும்பத்திலிருந்து வந்தவன். தாய்மொழி தமிழ் இல்லையெனினும் பெற்ற தாயைவிட ஆயின செய்யும் திருமாலின் மீதும் திருமகளின் மீதும் அத்தம்பதியரின் மீதான அன்பில் ஆழ்ந்த ஆழ்வார்கள் மீதும் பேரன்பு பூண்டவன். இந்த உலகிலேயே தமிழ் மொழியை விட மேலான ஒரு மொழி இல்லையென்பதில் அணுவளவும் சந்தேகமற்றவன். இருப்பினும் ஆழ்வார் ஈரச்சொற்களுக்கு வியாக்யானம் மணிப்ரவாளத்தில் இருப்பதனாலும், உடையவர், முதற்கொண்ட பூர்வாசார்யர்கள் அருளிய க்ரந்தங்களை சேவிக்க வேண்டியும் வடமொழியும், அதன் இலக்கணமாகிய லகு சித்தாந்த கௌமுதியும் கற்றேன். தர்க்க பாஷையில்லாமல் வேதாந்தம் பயில முடியாது என்பதனால் தர்க்கசங்க்ரஹமும் கற்றவன் ஆவேன். ஸ்ரீவைட்ணவத்தில் வடகலை பிரிவுக்கும், தென்கலைக்கும் வெறும் திருமண்காப்பு இடுவதில் பிரச்னை என்று பல பாமரர்கள் நினைத்துக் கொண்